என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arch"

    சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படுகிறது. நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார். #MGR #EdappadiPalaniswami
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.

    நாளை இதற்கான அடிக்கல்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்ட உள்ளார். சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
    ×