search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "April 23"

    • புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது.
    • மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.

    மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தினால் எழுத்து மீதான ஆர்வம் தூண்டப்பட்டு அவர்களின் எழுத்துகளை பின்னாளில் பிரசுரிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

    புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள், கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது. மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.




    உலக புத்தக தினம் 1995 -ம் ஆண்டு ஏப்ரல் 23 - ந்தேதி முதன் முதலாக கொண்டாடப்பட்டது, அன்றைய தினம் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்கள் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள்.வாசிப்பின் சக்தியை மக்கள் அடையாளம் காண இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

    உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் விதமாக உலக புத்தக தினம் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, ஆகியவற்றை ஊக்கப்படுத்துவது இதன் நோக்கம்.


    ஒரு மனிதனுக்கு புத்தகம் சிறந்த தோழன் ஆக உள்ளது. உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக இது அமைந்துள்ளது.

    புத்தக வாசிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் யுனெஸ்கோ, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலக்கிய பரிசுகளை வழங்கி வருகிறது.




    இந்த தினத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்குங்கள். நூலகங்கள், பள்ளிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக கொடுங்கள். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க நண்பர்கள், உறவினர்களுக்கு உதவிடுங்கள்

    ×