என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti-polygamy bill"

    • அசாமில் பலதார மணத்தை தடைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    சண்டிகர்:

    வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா இனி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, இஸ்லாம் பலதார மணத்தை ஊக்குவிக்க முடியாது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த மசோதா இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. உண்மையான இஸ்லாமிய மக்கள் இந்தச் சட்டத்தை வரவேற்பார்கள். துருக்கி போன்ற நாடுகளும் பலதார மணத்தை தடை செய்துள்ளன. பாகிஸ்தானில் ஒரு நடுவர் மன்றம் உள்ளது என தெரிவித்தார்.

    இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    ×