search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Flyover"

    • அண்ணா மேம்பாலத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் ரூ.8.85 கோடி செலவில் நடந்து வருகிறது.
    • கருணாநிதி அடிக்கல் நாட்டியது, திறந்து வைத்தது அடங்கிய கல்வெட்டு மக்கள் பார்வையில் படாதபடி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலத்துக்கு வயது 50. பாலங்கள் நிறைந்த சென்னையின் முதல் மேம்பாலம் இதுதான்.

    மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் 1971-ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.66 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 1.1.1973 அன்று கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

    தற்போது இந்த பாலத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் ரூ.8.85 கோடி செலவில் நடந்து வருகிறது. ஜி.ஆர்.சி. பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. தூண்களும் அழகுபடுத்தப்படுகிறது. பாலத்தின் கீழ் பூஞ்செடிகள் நடப்பட உள்ளது.

    இரு பக்க சுவர்களும் மாற்றியமைக்கப்பட்டு சங்கு தீபங்கள், திராவிட இயக்கத்தின் அடையாளமாக முக்கோண தீப சின்னங்களும், 6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சிங்க சிலைகளும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வளைவானது யானையின் தும்பிக்கை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி சாம்பல் வர்ணம் பூசப்பட்டு இருளிலும் ஒளிரும் வகையில் அழகுபடுத்தப்படுகிறது.

    கருணாநிதி அடிக்கல் நாட்டியது, திறந்து வைத்தது அடங்கிய கல்வெட்டு மக்கள் பார்வையில் படாதபடி உள்ளது. அதை மக்கள் பார்வையில் படும்படி வைக்கப்படுகிறது.

    பாலத்தின் அருகே அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்கு விசா விசாரணைக்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால் வெயிலிலும் மழையிலும் நின்று சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வசதியாக அந்த இடத்தில் சிமெண்ட் பெஞ்சுகளும் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×