என் மலர்
நீங்கள் தேடியது "Air India logo"
- புதிய லோகோவிற்கு "தி விஸ்டா" என பெயரிடப்பட்டுள்ளது
- புதிய லோகோ தங்கத்திலான ஒரு ஜன்னல் ஃப்ரேம் போல தோற்றமளிக்கிறது
இந்திய அரசின் நிறுவனமாக இருந்த விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இக்குழுமத்தின் டலாஸ் (Talace) பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனம் இதனை தற்போது நிர்வகிக்கிறது.
ஏர் இந்தியாவை மிகவும் லாபகரமானதாகவும், தரமான விமான சேவை நிறுவனமாகவும் இயக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை டாடா நிறுவனம் எடுத்து வருகிறது.
சமீபத்தில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் 470 புது விமானங்களை பல கோடி செலவில் வாங்க உள்ளது.
நிறுவனத்தின் மேம்பாட்டின் ஒரு பகுதியாக விமானங்களின் வெளிப்புற தோற்றத்திலும், பெயரிலும், ஏர் இந்தியாவிற்கான லோகோவிலும் பல மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் அனைத்து விமானங்களையும் சேவைக்கு பயன்படுத்த இருக்கிறது.
இதன்படி, இனி "தி விஸ்டா" என அழைக்கப்படும் இந்த லோகோ ஒரு தங்கத்திலான ஜன்னல் ஃப்ரேம் போல தோற்றமளிக்கிறது.
"இந்த புதிய மாற்றங்கள் டிசம்பர் மாதம் ஏர்பஸ் ஏ350 விமானத்தை முதல்முதலாக மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும்போது தெரிய வரும். துணிச்சலான பார்வை, வரம்புநிலை இல்லாத சாத்தியங்கள், முன்னேற்றம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை இந்த புதிய லோகோ குறிக்கிறது. புதிய பிராண்டாக உலக தரத்தில் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு மேன்மையான பயண அனுபவத்தை இது வழங்கும். இந்தியர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உலகெங்கிலும் இது பறைசாற்றும்" என டாடா குழும செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பல தசாப்தங்களாக இருந்து வந்த ஏர் இந்தியா மஹாராஜா அடையாளம் தற்போது மாற்றப்பட்டு ஒரு உற்சாகமான புதிய விமான சேவையை நோக்கி ஏர் இந்தியா வளர்வதை பயணிகள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள்.






