search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional price for maize"

    • கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.
    • கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் படைப்புழு பாதிப்பு தற் பொழுது இல்லை.

    குடிமங்கலம் :

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் முக்கியமான பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள், தானியங்கள், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.

    உள்ளூர் விளைச்சல் குறைவாக உள்ளதால் அண்டை மாநலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உள்ளுரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் படைப்புழு பாதிப்பு தற்பொழுது இல்லை. காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோளம் பயிரிட்டேன் .ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை சோளம் தேவை. அதனை அரசு மானியம் விலையில் கிலோ ரூ.230-க்கு வாங்கினேன்.

    வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ விதை சோளம் ரூ.400 வரை விற்கப்படுகிறது. நிலத்தை உழுவதற்கு ஏக்கருக்கு ரூ.5ஆயிரமும், மக்காச்சோளத்தை நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், வரப்பு கட்ட ஏக்கருக்கு ரூ.6 ஆயிரமும் மற்றும் மருந்து, உரம் ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.16 ஆயிரமும், அறுவடை ஏக்கருக்கு ரூ.8 ஆயிரமும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை எந்–திரத்தில் அரைப்பதற்காக ஒரு குவிண்டாலுக்கு ரூ.120-ம் செலவுகள் ஆகின்றன.

    120 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 40 குவிண்டால் வரை கிடைக்கும். ஆனால் தற்போது 25 முதல் 30 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. அதிலும் கிளிகள் தாக்குதலால் ஏக்கருக்கு 2 குவிண்டால் குறைந்து விடுகிறது. தற்பொழுது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2ஆயிரத்து 250-க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும் என்றனர்.  

    ×