என் மலர்
நீங்கள் தேடியது "Actor Ashok selvan"
- தெகிடி படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் ரமேஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
- தெகிடி படம் அசோக் செல்வனுக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தை உயர்த்தி கொடுத்தது.
அறிமுக இயக்குனராக களமிறங்கி, தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ரமேஷ் 11 வருடம் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்!
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தெகிடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அசோக் செல்வனுக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தையும் உயர்த்தி கொடுத்தது. துப்பறியும் வித்தியாசமான கதைக்களத்தில் கிரைம் திரில்லர் திரைப்படமாக கவனம் பெற்றது இத் திரைப்படம். அதோடு அற்புதமான திரைக்கதையும், பின்னணி இசையும் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் 11 வருடம் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சில காரணங்களால் தொடர்ந்து படங்களை இயக்க முடியாமல் இருந்த ரமேஷ் எங்கே சென்றார் என்ற கேள்வியும் எழுந்து வந்த நிலையில், அவர் அசோக் செல்வவுடன் 11 வருடம் கழித்து மீண்டும் இணைய உள்ளார். இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரபல ரேடியோ ஜாக்கி அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ.
- வீடியோவின் கீழ் அசோக் செல்வனை டேக் செய்துள்ளார் அஞ்சனா.
தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், பிரபல ரேடியோ ஜாக்கி அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வீடியோவிற்கு நடிகர் அசோக் செல்வன் கமெண்ட் செய்தால், தான் பெற்றோர் பார்க்கும் பையனையே திருமணம் செய்துக் கொள்வேன் என கூறினார்.
இருப்பினும், வீடியோவின் கீழ் அசோக் செல்வனை டேக் செய்த அஞ்சனா, "அசோக் செல்வன் மட்டும் கமெண்ட் செய்துவிட்டால், என் சோலி முடிஞ்சுது.." எனவும் கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.






