என் மலர்

  நீங்கள் தேடியது "The bike hit the barricades on the highway."

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடியாத்தத்தை சேர்ந்தவர்
  • போலீசார் விசாரணை

  ஆம்பூர்:

  குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் (வயது 30). ஆம்பூர் பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆம்பூர் பகுதியில் உள்ள ஷூ கம்பெனிக்கு காலையில் பைக் மூலம் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் நேற்று இரவு குடியாத்தம் செல்வதற்காக பைக் மூலம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பிகள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜான் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ×