என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RSAvENG"
- ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
- 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கிம்பர்லி:
தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் சதம் அடித்தனர்.
மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.
இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.
ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது.
3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.