search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Consumer Protection Day"

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது.
    • பள்ளி - கல்லூரிமாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி தேசிய நுகர்வோர்பாதுகாப்பு தினம்-உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவானது " தூய்மையானஆற்றலின் மூலமாக நுகர்வோர்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் (மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண்.20) மாவட்ட கலெக்டர் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் நுகர்வோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்அரசுத்துறைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், சுய உதவிக்குழுவினர் ஆகியோர்களைஒருங்கிணைத்து விழா கொண்டாடப்பட உள்ளது.

    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் சிறப்பம்சங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு சட்டம் -2011 (பேக்கிங் மற்றும் லேபிளிங்) சட்ட விதிமீறல்கள், உணவுப்பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல், தவறானவிளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாக கொண்டு ஓவியம் வரைதல் போட்டி, கவிதை- கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் முதல், மற்றும் இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற பள்ளி- கல்லூரிமாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    விழாவில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    ×