என் மலர்
நீங்கள் தேடியது "3 dead blast"
பஞ்சாப் மாநிலத்தில் மத விழாவின்போது 3 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் இரண்டாவது குற்றவாளியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #NirankariBhawan #Amritsarblast #BikramjitSingh #Avatarsingh
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்துக்குட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் கடந்த 18-ம் தேதி மத விழா ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் அந்த கட்டிடத்தின் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில் வீசும் குண்டுகளை ஒத்திருப்பதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான பிக்ரம்ஜித் சிங் என்பவரை கடந்த 21-ம் தேதி போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபர் அளித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு குற்றவாளியான அவ்தார் சிங் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து தற்போது போலீசார் பிடியில் சிக்கிய அவ்தார் சிங் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் முதல் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த பரம்ஜித் பாபா என்பவரின் தூண்டுதலால் இந்த தாக்குதலை இவர்கள் இருவரும் நடத்தியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. சுரேஷ் அரோரா குறிப்பிட்டுள்ளார். #NirankariBhawan #Amritsarblast #BikramjitSingh #Avatarsingh
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்தில் இன்று மத நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். #3deadblast #NirankariBhawan #Amritsarblast
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்துக்குட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் அந்த கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #3deadblast #NirankariBhawan #Amritsarblast






