search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 ODI World Cup"

    • எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் சிஎஸ்கே அணியில் இருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது.
    • பழைய பிரச்சினையை மனதில் வைத்து வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம்.

    ஆந்திராவை சேர்ந்த சிஎஸ்கே பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு, நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடருடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இந்நிலையில் ஐசிசி உலக கோப்பை 2019 தொடரில் வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம் என அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    இது குறித்து ராயுடு கூறியதாவது:-

    எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் தேர்வாளர்களாக இருந்தவர்களிடம் சில பிரச்சினை ஏற்பட்டதே, நான் 2019 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகாமல் போனதற்கு காரணமாக இருந்திருக்கலாம். பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் 2018-ல், 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஏற்ப தயாராகும் படி தெரிவித்தார்கள். ஆனால் பழைய பிரச்சினையை மனதில் வைத்து வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம்.

    சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு வீட்டில் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் சிஎஸ்கே அணியில் இருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    2019 உலக கோப்பை பட்டியலில் பிரதனமாக இருந்தவர் அம்பத்தி ராயுடு. ஆனால் கடைசி நேரத்தில் சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான அனுபவத்தை பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், 3டி (மூன்று பரிணாமங்களிலும்) அம்சம் கொண்ட வீரராக விஜய் சங்கர் இருப்பதாக, அவரது தேர்வுக்கு அப்போது தேர்வு குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் விளக்கமும் அளித்தார்.

    இதை கிண்டல் செய்யும் விதமாக 3டி கண்ணாடி ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார் அம்பத்தி ராயுடு. அப்போது அவரது டுவிட் வைரலானது.

    ராயுடு இந்தியாவுக்காக 55 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், மொத்தமாக 1736 சர்வதேச ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 சதமும், 10 அரைசதமும் அடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளுக்கு மட்டுமே விளையாடியிருக்கும் இவர். 6 முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரராக உள்ளார்.

    ×