என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 Baby Cobras"

    ஒடிசாவில் வீட்டில் குடியிருந்த 100 பாம்பு குட்டிகள் மட்டும் முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பதாட்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த பைகாஷி கிராமத்தில் உள்ள ஒரு மண் வீட்டில் பாம்புகள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த தொட்டியில் 100-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் இருந்துள்ளன. மேலும், இரண்டு பாம்புகளும், 20 பாம்பு முட்டைகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீட்ட அதிகாரிகள் காட்டுப்பகுதியில் விட்டனர்.


    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுனுள் 100 பாம்புகளுடன் அவர்கள் வசித்து வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    ×