என் மலர்
நீங்கள் தேடியது "விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை"
- தென்னந்தோப்புக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகேயுள்ள கால்வே ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (எ) சரவணன் (வயது 35), கூலி தொழிலாளி.தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த திருப்பதி தனக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தம்பி சசிகுமார் தந்த புகாரின்பேரில் காவேரி பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல போச்சம் பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்த பழனி(40) என்ற கூலி தொழிலாளி குடும்ப தகராறில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட பழனி அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






