என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார கம்பிகள்"

    • உயர் மின்னழுத்த கம்பிகள், மிகவும் தாழ்வான உயரத்தில் இருக்கிறது
    • இடையில் ஒரு மின் கம்பத்தை அமைத்து உயர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இடையில் ஒரு மின் கம்பத்தை அமைத்து உயர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    மத்தூர்,

    .கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து மாரம்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக அருகே உள்ள விவசாய நிலத்திற்க்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள், மிகவும் தாழ்வான உயரத்தில் இருக்கிறது.

    தனியாருக்கு சொந்தமான நிலம் சமன் படுத்தியதில், மின்கம்பி 4 அடி உயரத்தில் கீழே தரையை தொடும் நிலையில் இருக்கின்றது.

    நிலத்தின் உரிமையாளரோ அல்லது மின்சார துறையினரோ, உயர் மின்னழுத்த கம்பி அருகே செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை பலகையாவது வைத்திருக்க வேண்டும்.

    ஆபத்தை உணராமல் உயிர் பலி வாங்கும் நிலையில் உள்ளது. பாம்பாறு அணைக்கு வரக்கூடிய நபர்கள், மற்றும் ஆடு, மாடு, மேய்ப்பவர்கள் என பலரும் அவ்வழியை பயன்ப டுத்தினால், மின்சாரம் தாக்கி உயிர் பலி ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    உயர் மின் அழுத்த கம்பியின் அருகே எச்சரிக்கை பலகையோ, அல்லது உயர் மின்னழுத்த கம்பியை உயர படுத்தியோ அல்லது இடையில் ஒரு மின் கம்பத்தை அமைத்து உயர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ×