என் மலர்
நீங்கள் தேடியது "மாத தீபம்"
- ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்.
- ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் சூரிய சந்திரர்கள் ஒன்று சேருகின்ற அமாவாசையன்றும்,
நேர் எதிரே சந்திக்கின்ற பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி
பூஜை செய்ய வேண்டும்.
அதனால் ஏற்படும் பலன்களாவன:-
சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்
வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்
ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்
ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்
ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்
ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்
கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்
மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்
தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்
மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்
பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை உண்டு பண்ணும்






