என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெசவு"

    • நான்கு சேலைகள் உற்பத்தி செய்த குடும்பம் தற்போது ஒரு சேலை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
    • 6 மாதங்களாக பட்டு நூலின் விலை அதிகரித்ததால் பட்டு சேலை வியாபாரிகள், சேலை தயாரிப்பை நிறுத்தி விட்டனர்.

    மங்கலம்:

    பட்டு நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசாமி கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள்,நூல், கோரா மற்றும் பட்டு சேலைகள் நெய்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக பட்டு நூலின் விலை அதிகரித்ததால் பட்டு சேலை வியாபாரிகள், சேலை தயாரிப்பை நிறுத்தி விட்டனர்.

    இந்த வியாபாரிகளிடம் நெசவு செய்யும் நெசவாளர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு வாரத்துக்கு வேலை செய்தால் தான் நான்கு சேலைகள் நெய்ய முடியும்.இந்நிலையில் விலை உயர்வால் பட்டு சேலைகள் வாங்க மக்கள் வருவதில்லை. அதனால் விற்பனை மந்தமாகி விட்டதால் உற்பத்தியை குறைத்து விட்டோம் என்கின்றனர்.

    அதனால் நான்கு சேலைகள் உற்பத்தி செய்த குடும்பம் தற்போது ஒரு சேலை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இதனால் போதிய வருமானமின்றி நெசவாளர் களின் குடும்பங்கள் தவிக்கின்றன.மேலும் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை நவீன விசைத்தறிகளில் நெய்வதாலும் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்க ப்படுகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் கைத்தறி தொழில் அழிந்து விடும். எனவே பட்டு நூல் விலையை குறைக்கவும், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை நவீன விசைத்தறிகளில் நெய்ய தடை விதிக்க கோரியும் மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார். 

    ×