என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் குரு பூஜை விழா"

    • இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.
    • அபிஷேக ஆராதனையுடன் அர்ச்சனை சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், திருப்பத்தூர் சாலையில் உள்ள சோமேஸ்வரர் ஜோதிலிங்கம் கோவிலில் இரண்டாம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு மஹாவேள்வியாக பூஜையும், சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜையும், சோமேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனையுடன் அர்ச்சனை சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    இச்சிறப்பு பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மெய்யண்பர்களும்,சிவனாடியார்களும், சக்தி மகளிர்களும், கன்னிபெண்களும், மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மத்தூர் சிவனடியார் குழுக்கள் செய்திருந்தன.

    ×