என் மலர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி படுகாயம்"
- செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்தை ஏற்படுத்திவிட்டு அரசு பஸ்நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எறையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின்நாதன் .இவர் தனது 6மாத கர்ப்பிணி மனைவி கோகிலாவுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தீவனூர் அருகே செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவருடன் சென்ற 6 மாதம் கர்ப்பிணி கோகிலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . விபத்தை ஏற்படுத்திவிட்டு அரசு பஸ்நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ரோஷனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






