என் மலர்
நீங்கள் தேடியது "ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்"
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பெர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-16 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
- சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.
- 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.






