என் மலர்
நீங்கள் தேடியது "ஆரி"
நடிகர் ஆரி நடிப்பில் கடந்த வாரம் (பிப். 27) வெளியான திரைப்படம் ஃபோர்த் ஃப்ளோர். இந்தப் படத்தில் நடிகர் ஆரியுடன் பவித்ரா அரவிந்த், தீப்ஷிகா சந்திரன், சுப்ரமணிய சிவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இந்தப் படம் வெளியான நிலையில், ஃபோர்த் ஃப்ளோர் படத்திற்கு மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்று நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான "சல்லியர்கள்" திரைப்படத்திற்கும் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, திரையரங்குகள் வழங்கப்படாததால் சல்லியர்கள் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியடப்பட்டது. மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இந்த வரிசையில், தற்போது நடிகர் ஆரி தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் "ஃபோர்த் ஃப்ளோர்" திரைப்படத்திற்கு மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நடிகர் ஆரி, "தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை. கேட்டால், விளம்பரம் போதவில்லை என்கின்றனர். அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. படம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார்.
- பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை.
- டி.வி.யில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா தயாரிப்பில், இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் "4த் ஃப்ளோர்." இந்தப் படம் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆரி, "இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும் நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.
சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.
பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டி.வி.யில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.
படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும்," என்றார்.
இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல்.ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார்.
- ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆரி.
- இவரின் அடுத்த படத்தில் பிரபல நடிகைக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே மகா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஹன்சிகா தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்தை இகோர் இயக்குகிறார்.

ஹன்சிகா
இதில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரி ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லன் வேடத்துக்கு மாறும் கதாநாயகர்கள் பட்டியலில் தற்போது ஆரியும் இணைந்துள்ளார். இவரின் இந்த அடுத்த பரிணாமம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.






