திருமலைக்கேணியில் கார்த்திகை வழிபாடு

குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
திருமலைக்கேணியில் கார்த்திகை வழிபாடு
Published on

நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கார்த்திகையையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com