என் மலர்tooltip icon

    வழிபாடு

    தை அமாவாசை அன்று அன்னதானத்தின் மகத்துவம்
    X

    தை அமாவாசை அன்று அன்னதானத்தின் மகத்துவம்

    • அமாவாசை நாளில் பிறர் பசி போக்குவது கூடுதல் பலனை தரும்.
    • எறும்புகள் இரையை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் பழக்கம் உடையது.

    அமாவாசைக்கு வீட்டில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுபவர்கள் தங்கள் படையலை காகத்திற்கு உணவளித்த பின்னே விரதத்தை முடிப்பார்கள்.

    குறிப்பாக தை அமாவாசை அன்று காகத்திற்கு உணவளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் வைக்கும் உணவை காகம் சாப்பிட்டால் முன்னோர்களே ஆசிர்வதித்ததாக ஐதீகம்.

    காகம் மட்டுமல்ல ஏதாவது உயிர்களுக்கு தானம் அளிப்பது சிறந்தது. பொதுவாகவே பிறரின் பசி போக்க அன்னதானம் செய்வதற்கு பலன் அதிகம். அமாவாசை நாளில் பிறர் பசி போக்குவது கூடுதல் பலனை தரும்.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான உயிர்களின் பசியாற்றும் செயல்தான் எறும்புகளுக்கு உணவளிப்பது.

    ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எறும்புகளுக்கு அதை இரையாக போட வேண்டும்.

    பொதுவாக எறும்புகள் இரையை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் பழக்கம் உடையது.

    எனவே நீங்கள் வழங்கும் ஒரு அரிசி கூட பல உயிர்களுக்கு பசிபோக்குகிறது. ஒரு கைப்பிடி அரிசி ஓராயிரம் எறும்புகளின் பசிபோக்கும்.

    Next Story
    ×