என் மலர்
முக்கிய விரதங்கள்
சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும். ஞானம், மோக்ஷம், நற்குணங்கள் தரும். (க்ஷிப்ர பிரசாதனர்) விரைந்து அருள் செய்பவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற, கடன் தீர, அடமானம் வைத்த பொருள், நகைகளை மீட்ட, காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.
ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே. அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு கிரந்தம் இயற்றப்பட்டது. இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு. சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும். நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.
தத்தாத்ரேயர் ஜெயந்தியான இன்று இவருக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதான் மூலம் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.
ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும்.
பூரத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டால், உடனே திருமணம் கை கூடும்.வாரணம் ஆயிரம் பாடி வந்தால் பெண்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.
பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. 12 திருவோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள். இது பலரும் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.
ஒவ்வொரு கோவிலிலும் தல வரலாறுக்கு ஏற்ப கடவுளை வணங்கினால் உரிய பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் ஆண்டாளை வணங்க செவ்வாய்க்கிழமையே ஏற்ற தினமாகும். 8-ம் நூற்றாண்டில் துளசி வனத்தில் ஆண்டாள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டதால் அன்று முதல் செவ்வாய்க்கிழமை வழிபாடு சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஸ்ரீஆண்டாளுக்கு அரக்கு கலர் புடவை, கற்கண்டு சாதம், தாமரை மலர் ஆகிய மூன்றும் மிகவும் பிடித்தமானவையாகும். ஆண்டாளை வழிபாடு செய்யும் போது இந்த மூன்றையும் கொடுத்து வழிபாடு செய்யலாம். அரக்கு கலர் புடவை 9 கெஜம் இருக்க வேண்டும்.
மூன்றையும் படைக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்து ஆண்டாளை வணங்கலாம். அவளது ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை ஆண்டாளை வணங்க இயலாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை சென்று தரிக்கலாம். பெரிய பெருமாள் கோவிலுக்கும், ஆண்டாள் கோவிலுக்கும் மத்தியில் துளசி நந்தவனம் உள்ளது. அங்கு ஆண்டாள் தனியே நிற்கும் சன்னதி உள்ளது. இதை ஆடிப்பூரம் தினத்தன்று 108 தடவை சுற்றினால் நினைத்தது நடக்கும்.
மலர்கள் நிறைந்த இந்த சன்னதி மிக, மிக அமைதி தரும் சன்னதியாகும். அங்கு சிறிது நேரம் அமர்ந்து சென்றால் மனம் குளுமை ஆவதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.

முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மேற்கொள்ளும் முக்கிய விரதங்கள் மூன்று.
முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மேற்கொள்ளும் முக்கிய விரதங்கள் மூன்று. கார்த்திகை- கிருத்திகை விரதம், சுக்கிர - வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி விரதம்.
கார்த்திகை நட்சத்திரத்தன்று முருக பக்தர் விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, பசுக்கள், நிலபுலம், நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும்.
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகையில் வரும் பரணியன்று பகலில் உண்டு இரவில் உண்ணாது இருக்க வேண்டும். கார்த்திகை அன்று காலையில் நீராடி முருகன் கோயில் சென்று வழிபடவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருகனின் அருட்பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். முழு தினமும் முருகனை தியானம் செய்ய வேண்டும். மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி நித்திய வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு பிறகு அமுது செய்ய வேண்டும். (சைவ உணவு, பூண்டு, வெங்காயம் தவிர்க்கவேண்டும்). பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகையன்று விரதம் மேற்கொள்ள வேண்டும்.
சுக்கிர விரதம்
சுக்கிரவார (வெள்ளிக்கிழமை) விரதம் விநாயகர், அம்பிகை, முருகப்பெருமான் ஆகிய மூவருக்கும் உரியது. ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி முன்சொன்னபடி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும்.
சஷ்டி விரதம்
ஐப்பசி மாதம் வளர்பிறை (சுக்கிலபட்சம்)யில் வரும் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நீராடி, நித்திய கடன் முடித்த பின் பூரணகும்பம் வைத்து நீர் பரப்பி, மாவிலை வைத்து தருப்பையைப் பரப்பி அதன்மீது சந்தனம் வைத்து குங்குமம் அட்சதை இட்டு, முருகப்பெருமானை அதில் எழுந்தருளச் (ஆவாகனம்) செய்து, மலர் தூவி, தூப தீபம் காட்டி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.
பகலில் உறங்கக் கூடாது. ஆறு நாட்களும் முருகப்பெருமான் அருட்பாடல்களை ஓதவேண்டும். கந்தன் சரிதம் படிக்க/கேட்க வேண்டும். தியானம், ஜபம் செய்ய வேண்டும். அருகிலுள்ள முருகன் கோவிலில் நடை பெரும் சஷ்டி விழாக்களில் தினமும் கலந்து கொள்ள வேண்டும்.
சூரசம்ஹாரவிழா, திருக்கல்யாண விழாக்களை கண்டு களித்து அதன்பின் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மாதம் தோறும் வளர்பிறை சஷ்டியில் ஒருநாள் இதுபோல் விரதம் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பவர் எண்ணிய நலன் பெறுவர், புண்ணிய பலம் பெறுவர். ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேல் வேல் வெற்றிவேல்!!!

விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.
விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது. எண்ணெய் பூசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.
சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருதபடும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகிறது. இவ்வளையம் இருப்பதால் கிரங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது.
விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.
இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் ஸ்தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் மிகவும் சிறந்தது. சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர்.
பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.
பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள்.

விநாயகருக்கு மிகவும் உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் எப்படி கடைப்பிடிப்பது என்று பார்க்கலாம்.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
ஓவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும். தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
ஹரஎன்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில்; வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கின்றனர்.
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் நிலையான சந்தோசத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயள், நிலையான செல்வம். நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் அதிகமாகக் குறையும்.
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். பால் பழம் மட்டும் அருந்தலாம். மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூசைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு அறுகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
எனும் கணேச காயத்ரி மந்திரத்தையும் தமிழில் ஒளவையார் அருளிய விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். "பாவை நோன்பு" " கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும்.
பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து, ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும்.
இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

விநாயகரை சதுர்த்தி விரதம் வரும் ஆவணி மாதத்தில் விரதமிருந்து சென்று வழிபட்டு வந்தால், சகல பாக்கியங்களையும் பெறுவதற்கான வழிபிறக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்களில் ஒன்றாக இருப்பது மணக்குள விநாயகர் ஆலயம். இவரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறுவதாக மக்களின் நம்பிக்கை. அற்புத கீர்த்தி தரும் மணக்குள விநாயகர் ஆலயத்தின் மேற்புறத்தில், ஒரு குளம் இருக்கிறது.
கடற்கரை அருகில் உள்ளதால், அதில் மணல் அதிகமாக இருக்கும். அந்தக் குளத்திற்கு ‘மணல் குளம்’ என்று பெயர். அதனால் மணக்குள விநாயகர் ஆலயம் என்று பெயர் வந்துள்ளது. இந்த விநாயகரை சதுர்த்தி விரதம் வரும் ஆவணி மாதத்தில் விரதமிருந்து சென்று வழிபட்டு வந்தால், சகல பாக்கியங்களையும் பெறுவதற்கான வழிபிறக்கும்.
முதன் முதலில் சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள் ஆவணி மாதம் வரும் சதுர்த்தியில் விரதம் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று தரித்த பின் தொடங்க வேண்டும். வினைகளை தீர்ப்பவர் விநாயகர். அதனால் முதன் முதலாக எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயருக்கு விரதம் இருந்து அவரை வழிபட்ட பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும்.
தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.
ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

திதி மற்றும் வார தினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும்.
விரதங்களை கடைபிடிப்பதால் மேல் நிலையை அடைந்தவர்கள் ஏராளம். கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையை அனுசரித்து அதன் அடிப்படையில் விரதமிருந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மா உயர்நிலையை அடையும் என்கிறார்கள்.
இதில் திதி மற்றும் வார தினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும். ஏகாதசி, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதிகளிலும் மற்றும் திங்கள் (சோம வாரம்) , வியாழன் (குருவாரம்) போன்ற வாரநாட்களிலும் விரதமிருப்பது நன்று. திதிகள் என்பது 15 நாளுக்கு ஒருமுறை வரும்.
மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும். சிலர் வட இந்தியாவில் கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள் தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக முதல் திதி அன்று ஒரு கவளம் சாப்பாடு, 2ஆம் திதி அன்று இரு கவளம் சாப்பாடு என உயர்த்தி பௌர்ணமி அன்று முழு சாப்படு சாப்பிடுவார்கள்.
இதேபோல அடுத்தநாள் ஒரு கவளம் சாப்பாடு குறைத்துக் கொண்டே வந்து அமாவசை அன்று ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்துகிறார்கள். ஆனால் வேத சாஸ்திர ரீதியில் ஏகாதசி விரதித்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு. பகவத்த்கீதையில் பரமாத்மா திதியில் ஏகாதசியாக இருக்கிறேன் என கூறுகிறார்.
ஏகாதசியில் விரதமிப்பது மிகவும் சிறந்தது. சிலர் இதை தவறாக கடைபிடிக்கிறார்கள். ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல விரதம். இதை முறைப்படி கடைப்பிடிப்பது விரதமாகும். உதாரணமாக ஏகாதசிக்கு முன்பு 3 நாட்கள், பின்பு 3 நாட்கள் என மொத்தம் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
முதல் நால் எளிய உணவும், அடுத்த நாள் பழவகைகள் உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாம் நாள் பழரசம் மட்டும் பருகவும். அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் விரத தினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு முறையை மாற்றவும். இதை கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,
திதி உணவு முறை :
அஷ்டமி :
எளிய உணவு (பருப்பு மற்றும்
நெய் கலந்த காரமற்ற உணவு)
நவமி :
சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்.
தசமி :
பழரசங்கள், எலுமிச்சை ரசம்
ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம்
அருந்தி விரதம்துவங்கவும்
துவாதசி :
பழரசங்கள், எலுமிச்சை ரசம்
திரயோதசி :
சமைக்கப்படாத பழம்
மற்றும் காய்கறிகள்
சதுர்தசி :
எளிய உணவு ( பருப்பு மற்றும்
நெய் கலந்த காரமற்ற உணவு)
இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில் கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும். வழக்கமாக திடீரென ஒரு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நமது உடல் மற்றும் மனத்தடுமாற்றம் ஏற்படும். இதை தவிர்க்கவே இந்த முறை.
விரத நாளான ஏகாதசி அன்று மவுன விரதம் இருப்பதும் நன்று. மவுன விரதம் இருந்தாலும் 1,5,11 என்ற வீடும் குரு மற்றும் சூரியன் சம்மந்தப்படு வேலை செய்வதால் உடல் மற்றும் ஆன்ம முன்னேற்றம் உண்டு. மேலும் ஏகாதசி அன்று, வளர்பிறை அல்லது தேய்பிறை என எந்த ஏகாதசியானாலும் சூரியனும் சந்திரனும் 120 டிகிரி அதாவது சரியான கோணம் என்ற நிலையில் இருப்பதால் கோள்கள் ரீதியாக இதற்கு முக்கியத்துவம் உண்டு. அன்று நமது உடல் மற்றும் மனது தெய்வ நிலைக்கு(மேல் நோக்கி) செல்ல தயாராகிறது.
நாம் உணவு உட்கொண்டு உணவை ஜீரணம் செய்ய கீழ்நோக்கி இழுப்பது பாவச்செயல் ஆகும். வட இந்தியாவில் இந்த ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் அதிக கட்டுப்பாடுடனும் கடைபிடிக்கிறார்கள். ப்ரம்மச்சாரிகள்(18 வயதுக்கு உட்பட்டவர்கள்), சன்னியாசிகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் விரதத்தை கடைபிடிக்க தேவை இல்லை என சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள் மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால் எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய் எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.

விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகளை பார்க்கலாம்.
அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.
கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்ட லட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.
அன்று பகலில் திரவ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து விரதம் மேற் கொள்ள வேண்டும். விரத சமயத்தில் விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டோ அல்லது கேட்டுக் கொண்டோ இருப்பது நல்ல பலன்களைத் தரும். அலுவலகம் அல்லது வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால், ஓம் நமோ நாராயணாய என்றோ, ஸ்ரீமகாவிஷ்ணுவே நமக என்றோ மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும். காலையில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் மாலை சென்று பெருமாளை வணங்கி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து வழக்கமான உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக் கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.
அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான். இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.

இன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.
பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.