என் மலர்
முக்கிய விரதங்கள்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவதற்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது.
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம். இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதாரணமான விளக்கு 7 விளக்கு போடலாம்.

மனமானது, பகவான் ஹரியிடம் அன்பு வளரப்பெற்று, பக்திமேலீட்டினால் உருகிக் கசிந்து, இறைவனை நினைத்த மாத்திரத்தில் பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகிக்கப்பட்டு, பரிபக்குவ நிலையை அடைகிறது.
மிக பிரகாசமான தாமரை போன்ற முகம், தாமரையிதழின் உட்புறம் போன்ற சிவந்த கண்கள், நீலமேக சியாமள வண்ண திருமேனி, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள், மஞ்சள் வண்ணப் பட்டாடை, திருமார்பில் துலங்கும் ஸ்ரீவத்ஸம், திருக்கழுத்தில் தொங்கும் கௌஸ்துப மணியின் ஒளி, வனமாலை, முத்துமாலை, கிரீடம், தோள்வளை, கங்கணம், நூபுரம், இடுப்பில் தங்க அரைநாண் ஆகியவற்றுடன், அடியாருக்கு இனியவரும், கண்ணுக்கு மிக அழகிய தோற்றம் கொண்டவருமாக, இறைவனை தியானிக்க வேண்டும்.
மனதை, பகவானின் ஒவ்வொரு அங்கத்திலும், சித்தத்தை லயிக்கச் செய்து தியானிக்க வேண்டும்.
பின், பகவானின் திருவடித்தாமரைகளைத் தியானிக்க வேண்டும். திருவடிகளை, வஜ்ரம், அங்குசம்,கொடி, தாமரை முதலிய அடையாளங்களுடன் இருப்பதாகவும், சிவந்த ஒளி பொருந்திய நகங்களுடன் உடையதாகவும் தியானிக்க வேண்டும்.
பிறகு, மனக்கண்ணால், படிப்படியாக, பகவானின் ஒவ்வொரு அங்கத்தையும், கணுக்கால், முழங்கால் இப்படியாக உற்று நோக்க வேண்டும். பகவானின் அழகிய மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்கள் விளங்கும் புன்முறுவலைத் தியானிக்க வேண்டும் இவ்வாறு புன்முறுவலைத் தியானித்தல் தியானத்தில் எல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தியானத்தினால், பக்தி மேலிட்டு, மனம் மெதுவாக அடக்கப்படுகிறது. மனமானது, பகவான் ஹரியிடம் அன்பு வளரப்பெற்று, பக்திமேலீட்டினால் உருகிக் கசிந்து, இறைவனை நினைத்த மாத்திரத்தில் பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகிக்கப்பட்டு, பரிபக்குவ நிலையை அடைகிறது.
இந்த நிலையை அடைந்த மனிதன் தன்னுடையதாகப் பிறர் கூறும் சரீரத்தை உணர்வதில்லை. அவன் இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை எய்தி விடுகிறான்.
தேகம் பூர்வ கர்ம வசத்தால் ஏற்படுவது. பிராரப்த கர்மம் இருக்கும்வரை அது புலன்களுடன் கூடி இருக்கும். ஆனால் யோகத்தில் உயர்ந்த சமாதி நிலையை அடைந்தவன், தேகத்தையும் பிரபஞ்சத்தையும் காண்பதில்லை(அதாவது பொருட்படுத்துவதில்லை). தூக்கத்தில் காணும் கனவை, விழித்தபின் நிஜமல்ல என்று உணருவதைப் போல, யோகத்தில் உயர் நிலையை அடைந்தவர், உலகைக் கனவென்று கருதுவர்.

இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது.
போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ஆம் நூற்றாண்டிலேயே மிகவும்தைரியமாகப் பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமுகத்தினர்.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இச்சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனத்திலே பிரார்த்தனை செய்து கொண்டார்.
பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது. செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டு தோறும் தன் ஊரிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரையாகவே சென்று கொடுத்தார். முருகனின் கருணை வெள்ளத்தில் அழுந்திய அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார்.
இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதகாக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர். இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது. ஒரு குழு பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்து பழனி வருகின்றனர்.
இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களிலிருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடி களுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இதே போன்று பல்வேறு பிரிவினர்களும் காவடியெடுத்துப் பழனிக்கு நடந்து வருவர். வழியில் நாட்டார் காவடிகள் என்றும் நகரத்தார் காவடிகள் என்றும் நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை.
நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து வைத்து மறுபடியும் பயணம் மேற்கொள்வர். இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும் ஆடியும் நடந்து செல்வார்கள்.
பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள். அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி விரதமிருந்து இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடிகளை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள்.
இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது. தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே விரதமிருந்து பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் வேறு எந்த கோவிலிலும் பாதயாத்திரைப் பக்தர்கள் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரியின் போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
தேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள்.
இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள்.
மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள். இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டி கொலு வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுகின்றனர்.
நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும். விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.
நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். “துர்காஷ்டமி’ என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம். மேலும் ஒன்பது நாள்களிலும் தேவி ஒன்பது வடிவங்களில் காட்சியளிக்கிறாள். குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்னும் ஒன்பது வடிவங்களில் தேவி காட்சி தந்து அருள்புரிகிறாள்.

சிவராத்திரி அன்று கண்விழித்து விரதமிருந்து சிவபெருமானுக்கு எந்த முறையில் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சிவராத்திரி அன்று கண்விழித்து விரதம் இருந்து, சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவபூஜையை தொடங்க வேண்டும். மனத்தூய்மையோடு, சிவனுக்குரிய நாமங் களைக்கூற வேண்டும். இந்த விரதத்தின் பொழுது நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரவு முழுவதும் 1008 முறை கூறினால் மகத்தான பலன் கிடைக்கும்.
வில்வம், துளசி, அருகு முதலியன பூஜைக் குரிய இலைகளாகும். தாமரை, செண்பகம், நீலோத்பவம், அத்தி முதலிய பூக்கள் பூஜைக்குரிய பூக்களாகும். வில்வப்பழம், மாதுளை, பலாப்பழம் ஆகியவை நிவேதனப் பொருட்களாக வைக்க உகந்தது.

விநாயகருக்கு உகந்த இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனுஷ்டிக்கவேண்டும்.
இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனுஷ்டிக்கவேண்டும். விரதத்தைத் தொடங்கும்போதே எத்தனை வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்கவேண்டும் என்பதை சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.
அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு விரதத்தை தொடங்கவேண்டும். பூஜையறையில் கலச ஸ்தாபனம் செய்து, அந்தக் கலசத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்யவேண்டும். பின்னர் கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.
அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது. இரவு படுக்கப்போவதற்கு முன்பு சிறிதளவு பழமும் பாலும் உண்ணலாம் வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.

மாசி மாதங்களில் ‘மகம்’ நட்சத்திரம் அன்று தம்பதிகள் விரதமிருந்து, அன்னதானம் செய்தால் சிறப்புக்குரிய வாரிசுகள் உருவாவார்கள். இது முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது.
எல்லா மாதங்களிலும் ‘மகம்’ நட்சத்திரம் வந்தாணீலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது.
எல்லா மாதங்களிலும் ‘மகம்’ நட்சத்திரம் வந்தாணீலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன. உலகத்தைப் படைப்பதற்காக, உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர். அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி, அதாவது முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே ‘கும்பகோணம்’ என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது.
அங்கு ‘மகாமக’ விழா சிறப்பாக நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற வருடங்களில் வரும் மாசி மாதங்களில் ‘மகம்’ நட்சத்திரம் வரும் பொழுது, நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும்.
இது முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினம் தம்பதிகள் விரதமிருந்து, அன்னதானம் செய்தால் சிறப்புக்குரிய வாரிசுகள் உருவாவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மாசி மகம், இந்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் சிவனை வழிபடுவதன் மூலம் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.
முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக உள்ளது தைப்பூசம். சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இது தவிர பூச நட்சத்திரம், தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் ‘தைப்பூச’ திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் முக்கியமானது.
மயிலாப்பூரைச் சேர்ந்த சிவனடியார் ஒருவரின் மகள் பூம்பாவை. இவள் பாம்பு தீண்டி இறந்தாள். அவளது அஸ்தியை, அந்த சிவனடியார் பத்திரமாக வைத்திருந்தார். ஒரு முறை திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, தன்னுடைய நிலையைக் கூறி வருந்தினார் சிவனடியார். இதையடுத்து திருஞானசம்பந்தர், அந்த அஸ்தியைக் கொண்டு வரச் சொல்லி இறைவனை நோக்கி பதிகம் பாடி அந்த பெண்ணை உயிர்பித்தார்.
‘மைப்பூசு மொண்கண் மடநல்லூர் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் மர்ந்தான்
நெய்ப்பூசு மொண் புழுக்கள் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்று அந்த பதிகத்தில் பாடினார்.
இதில் இருந்து தைப்பூசம் மிகவும் பழமைவாய்ந்த திருநாள் என்பது புலனாகியது. ஏனெனில் திருஞானசம்பந்தர் கி.பி. 7, 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான் இருக்கும் இடங்களில் எல்லாம் தைப்பூசத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
விரதம் இருப்பது எப்படி?
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும். அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.
தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார்.
இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும். தொழில் மேன்மை உண்டாகும். தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோலாலம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலைக்கு அதிகாலையில் ஊர்வலமாக நடந்து செல்வர். இதற்கு எட்டுமணி நேரம் பிடிக்கும். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் செல்வர். சுங்கைபத்து ஆற்றில் நீராடிவிட்டு மலைக்கோவிலுக்கு படியேறி செல்வர்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலையிலும் விழா கொண்டாடப்படும். சிங்கப்பூரில் உள்ள முருகன்கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். அன்று தேரோட்டம் நடைபெறும். திரளான பக்தர்கள் அலகுகுத்தி, நேர்த்திக் கடன் செலுத்துவர். தண்ணீர்மலை கோவிலில் தைப்பூச விழா 3 நாட்கள் நடைபெறும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் விமரிசையாக கொண்டாடுவர்.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். இதை குறிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் தைமாதத்தில் தைப்பூசத்தன்று அதிகாலை ஜோதிதரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக்குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இதன் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 9-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
வரலாறு: தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.
கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடு களிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை இந்த விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும்.
மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.
மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும். இந்த விரதம் கடைபிடிப்பதற்கான கதையை விரிவாக கீழே பார்க்கலாம்.
இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.
ஒரு முறை, கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார்.
முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.
ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.
அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.
முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.
இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.
முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே, அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள். ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ்ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருக்க ஒட்டாது விரட்டினார்கள்.
பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள்.
ராணியானவள், எந்த வேளையிலும் கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்.
அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.
எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரத சப்தமி’ ஆகும். ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவ மாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.
சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும், ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக்கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.
சூரியன் பச்சை நிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப் படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும், ஆறு ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது. சூரிய பகவான் தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரத சப்தமி’ ஆகும். இது சூரிய ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் ஏழு என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.
அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.
இந்த ஏழு எருக்கம் இலைகளையும், கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.
ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.