என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.
இதே போன்று ரோமரிஷி தமிழகத்தின் வேறு சில பகுதியிலும் தன்னை பற்றிய பதிவை உருவாக்கி இருக்கிறார்.
தஞ்சை, கரந்தையில் உள்ள சிதாநாதீஸ்வரர் கோவிலும் ரோமரிஷி சித்தர் தவம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
அவர் தவம் இருந்த இடத்தில் சிறிய துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை ரோமரிஷியின் ஜீவ சமாதி என்றும் சொல்கிறார்கள்.
சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.
தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை அருகில் வடவாற்றங்கரை பூக்குளம் சிதாநந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
நீண்ட நாள் நோயால் தவிப்பவர்களுக்கு இந்த ஆலயம் பரிகார தலமாக இருப்பதால், ரோமரிஷியின் அருளையும் பெற முடியும்.
- ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.
- அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.
அந்த நிலையில் நீராடாமல் ஜம்புகாரண்யேஸ்வரரை தரிசனம் செய்ய ரோமரிஷி புறப்பட்டு வந்தார்.
இதை கண்டதும் அவரை கோபுர வாசலிலேயே முருகப்பெருமான் தடுத்து நிறுத்தினாராம்.
இதனால் வேதனை அடைந்த ரோமரிஷி அந்த கோபுர வாசல் அருகிலேயே தவம் இருக்க தொடங்கி விட்டார்.
தினசரி நீராடல் போன்ற புறத்தூய்மையை விட ஆத்மார்த்தமாக நினைக்கும் அவரது அகத்தூய்மையே சிறந்தது என்பதை உலகத்துக்கு உணர்த்தும் வகையில் கோவிலுக்கு வெளியில் வந்து ரோமரிஷிக்கு ஜம்புகாரண்யேஸ்வரர் காட்சி கொடுத்ததாக அந்த ஆலய தல வரலாறில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.
அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.
இந்த முருகருக்கு குமரகுருபரர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரோமரிஷியின் அருளைப் பெற விரும்பும் கிருத்திகை நட்சத்திரத்துக்காரர்கள் கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று ரோமரிஷியின் அதிஷ்டானம் அமைந்துள்ள பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும் நிச்சயம் பலன் உண்டு.
கூந்தலூர் ஆலயத்தின் ஈசான்யம் பகுதியில் இந்த அதிஷ்டானம் இருக்கிறது. ஈசான்யம் பகுதியில் நவக்கிரகங்கள் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த தலத்தில் செவ்வாயுடன் தொடர்புடைய முருகப்பெருமான் அங்கு அமர்ந்து இருப்பதால், எத்தகைய செவ்வாய் தோஷமும் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததும் விலகி ஓடி விடும் என்பது ஐதீகமாகும்.
சனி கிரக பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் ரோமரிஷி அதிஷ்டானம் திகழ்கிறது.
- அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
- அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.
அவர் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
அவர் ஜீவ சமாதி அடைந்ததற்கான உறுதியான தகவல்களும் இல்லை.
அதற்கு காரணம் அவர் உடல் அழியவில்லை.
அவர் கைலாய மலைக்கு சென்று ஜீவ சமாதி அடைந்ததாக பெரும்பாலான ஆய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவர் வாழ்ந்துள்ளார். பல சிவாலயங்களுக்கு சென்று தியானம் இருந்து திருப்பணிகள் செய்துள்ளார்.
ரோமரிஷி வைத்தியம் ஆயிரம், ரோமரிஷி சூத்திரம் ஆயிரம், ரோமரிஷி ஞானம் 50, ரோமரிஷி பெருநூல் 500, ரோமரிஷி காவியம் 500, ரோமரிஷி மூப்பு சூத்திரம் 30, ரோமரிஷி ஜோதிட விளக்கம் போன்று ஏராளமான நூல்களை எழுதி உள்ளார்.
அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்து உள்ளன.
அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.
கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்து அவர் செய்த அற்புதங்கள் இப்போதும் பேசப்படுகிறது.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த ஆலயத்தில் அவர் தவம் செய்யும்போது தனது தாடியை தடவி தங்கத்தை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுப்பாராம்.
ஒரு தடவை அவர் தாடி வழியே தங்கம் வருவது நின்று போனது.
உடனே தாடியை மழித்து அகற்றி விட்டார்.
என்றாலும் ஈசனிடம் சரண் அடைய அவர் மனம் விரும்பியது.
- இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.
- இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் இத்தனை பாக்கியமும் ஒருசேர ஒருங்கே கிடைத்து விடுவதில்லை.
இந்தப் பாக்கியங்களை பெற சித்தர்களை நாடி தியானம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு.
கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்த அல்லது முக்தி பெற்ற சித்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
மயிலாடுதுறை பால் சுவாமிகள் (மார்கழி&கார்த்திகை), ஞானாந்தகிரி சுவாமிகள் (தை&கார்த்திகை) மதுரை காதகிணறு நடனகோபால சுவாமிகள் (மார்கழி&கிருத்திகை) கிருத்திகையுடன் தொடர்புடையவர்கள்.
கொடுமுடி அருகே சிவகிரியில் உள்ள ராமானந்த சித்தர் ஜீவ சமாதியில் கிருத்திகை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முழு பயனை அடைய வேண்டுமானால் ரோமரிஷி சித்தரை நாடி செல்ல வேண்டும்.
இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.
இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் இவர் உடல் முழுக்க முடி (ரோமம்) இருந்ததால் இவருக்கு ரோம ரிஷி என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு கருத்து உண்டு.
ஆனால் போகர் தனது பாடலில், "ரோமரிஷி செம்படவருக்கும் குறத்திக்கும் பிறந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரோமரிஷிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
அதே போன்று அவரது அவதாரம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.
- தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமும் கிருத்திகையே.
- இதனால் இந்த நட்சத்திரத்திற்கு தனித்துவம் உண்டு.
நட்சத்திர வரிசையில் 3வது இடத்தில் கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரம் உள்ளது.
ஆனால் 27 நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகைதான்.
கத்தி போல அமைந்துள்ள நட்சத்திர கூட்டமே கிருத்திகை.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமும் கிருத்திகையே.
இதனால் இந்த நட்சத்திரத்திற்கு தனித்துவம் உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை அவசியம் வழிபட வேண்டும்.
கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சிக்கலில் உள்ள சிங்காரவேலனின் தரிசனம் நன்மை தரும்.
2, 3, 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு திண்டிவனம் அடுத்துள்ள மைலம் முருகன் தலம் மகத்துவம் கொடுக்கும்.
பொதுவாக கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள்.
சுறுசுறுப்பும், வெளிப்படையான பேச்சும், தெய்வ பக்தியும் இவர்களது இயல்பு.
ஆடை அணிவதில் கூட இவர்களிடம் ஒரு நேர்த்தியை பார்க்க முடியும்.
- காலபைரவரின் கருணை பார்வையால் கையோடு திருமணம் நடைபெற்றுள்ளது.
- எனவே ராமகிரி திருத்தலம் திருமண வரம் தரும் தலமாகவும் திகழ்கிறது.
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாக சொல்கிறார்கள்.
சில ஜாதககாரர்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும்.
அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள் 10 ம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து சிலருக்கு கிரக அமைப்புகள் படி திருமண தோஷம் இருக்கும்.
உரிய வயதிற்கு பிறகும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள் ராமகிரி காலபைவரிடம் சரண் அடைந்தால் உரிய பலன் கிடைக்கும்.
இந்த தலத்துக்கு வந்து காலபைரவருக்கு அபிஷேகம் செய்து உரிய வழிபாடு செய்தவர்களுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
காலபைரவரின் கருணை பார்வையால் கையோடு திருமணம் நடைபெற்றுள்ளது.
எனவே ராமகிரி திருத்தலம் திருமண வரம் தரும் தலமாகவும் திகழ்கிறது.
- வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.
- மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.
பைரவருக்கு பூசணிக்காய், தேங்காயில் தீபம் ஏற்றுவதை பெருபாலான பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
ஆனால் ராமகிரி தலத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் எண்ணையை ஊற்றி தீபம் ஏற்ற தடை விதிக்கப்பபட்டுள்ளது.
அகல் விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ராமகிரி ஆலயத்தின் அருகில் தேங்காய், பூசணிக்காய் போன்றவை விற்பனை செய்யப்படுவதில்லை.
அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
என்றாலும் கால பைவரருக்கு பழம் வகைகளில் தீபம் ஏற்றுவது மிக சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது.
எனவே பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தி இருப்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1.தேங்காய்-குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்.
2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி-நரம்பு வியாதி, திருமணம் தடை நீங்கும்.
3.கொடை மிளகாய்-புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
4.கொய்யா பழம்/ கத்திரிக்காய்-நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.
5.பீட்ருட்- ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.
6.பாகற்காய்-சனி பாதிப்பு நீங்கும், கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.
7.வில்வபழம்- மாதுளம்-லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.
8.ஆரஞ்சு பழம்-தொழில் விருத்தி ஏற்படும்.
9.அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.
10.பப்பாளி பழம்-திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
11.இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.
12.வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.
13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.
- சிவலிங்கத்தில் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம்.
- மூலஸ்தான லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் இருக்கும் ஒரே சிவாலயம் இது என்பது ஒரு தனிச்சிறப்பு.
ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக ஆஞ்சநேயரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கத்தை தந்திரமாக அவரிடமிருந்து வாங்கி, ஸ்ரீ காலபைரவர் இங்கு பிரதிஷ்டை செய்தார் அல்லவா?
அந்த லிங்கத்தை ஆஞ்சநேயர் தன் வாலினால் பற்றி, பெயர்த்தெடுக்க முயற்சித்ததனால் ஈஸ்வரருக்கு வாலீஸ்வரர் எனக் காரணப் பெயர் உண்டாயிற்று.
சிவலிங்கத்தில் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம்.
அவருக்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கை கூப்பியபடி வழிபடும் நிலையில் பக்த ஆஞ்சநேயராக விளங்குவதையும் நாம் காணலாம்.
மூலஸ்தான லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் இருக்கும் ஒரே சிவாலயம் இது என்பது ஒரு தனிச்சிறப்பு.
ஆஞ்சநேயர் தன் வாலினால் லிங்கத்தைச் சுற்றி இழுக்கும் தல வரலாற்றின் ஐதீக சிற்பம் ஆலய தூணிலும் செதுக்கப்பட்டு இருக்கிறது.
மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இரவு வாண வேடிக்கைகளுடன், திரு வீதி உலாவும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.
- சிலரது கொள்ளிக்கண் பார்வை மற்றவர்களது வாழ்க்கையை கடுமையாக பாதித்து விடும்.
- இத்தகைய திருஷ்டியில் இருந்து தப்பிக்க ராமகிரி காலபைரவர் மிக சிறந்த வரபிரசாதியாக உள்ளார்.
பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள்,உயர்வுகள், நல்லநிலைமைகள் போன்றவற்றை கண்டு, நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும் பொறுமலும், பொறாமையும் கொண்டு கெட்ட எண்ணங்கள் பலவற்றின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வையிலும், பேச்சிலும் கொடிய விஷத்தன்மைகள் நிரம்பி காணப்படும்.
இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச்செய்கிறது.
அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.
இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள்.
பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும்.
சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்கவிடுவார்கள்.
சிலர் நாக்கு வெளியே தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள் சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள்.
இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்ற சிலவற்றை செய்யலாம்.
இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும் சில சமயம் சிலரது கொள்ளிக்கண் பார்வை மற்றவர்களது வாழ்க்கையை கடுமையாக பாதித்து விடும்.
இத்தகைய திருஷ்டியில் இருந்து தப்பிக்க ராமகிரி காலபைரவர் மிக சிறந்த வரபிரசாதியாக உள்ளார்.
அவரை மனம் உருக வேண்டினால் எவ்வளவு பெரிய திருஷ்டி தோஷமும் விலகி ஓடி விடும் என்பது பக்தர்களின் அனுபவம் ஆகும்.
எனவே ராமகிரி காலபைரவரை வழிபட செல்லும் போது மனதுக்குள் திருஷ்டி தோஷம் விலகி ஓடவும் வேண்டிக் கொள்ளுங்கள்.
- அப்படி குழந்தை செல்வத்தை அடைந்தவர்கள் வைத்து விட்டுப்போன
- கல்நாய்க் குட்டி பொம்மைகள் நூற்றுக் கணக்கில் ஆலயத்தில் இருப்பதை இப்போதும் காணலாம்.
குழந்தை செல்வம் வேண்டும் தம்பதியர் இங்கு வந்து நந்தி தீர்த்ததில் நீராடி காளிகாதேவி சமேத ஸ்ரீகால பைரவரை தரிசித்து அங்கிருக்கும் கல்நாய்குட்டியை எடுத்துக்கொண்டு நாய் வாகனத்தை மும்முறை வலம் வந்து நாய்குட்டி பொம்மையைக் கீழே வைத்து விட்டு குழந்தை செல்வம் அருள ஸ்ரீகால பைரவ மூர்த்தியிடம் பிரார்த்தித்துக்கொண்டு வணங்கிச்செல்வார்கள்.
ஸ்ரீகால பைரவ சுவாமியின் பரிபூரண கருணாகடாட்சத்தினால் குழந்தை செல்வத்தைப் பெற்று, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு புதிய ஒரு கல்நாய்க்குட்டி பொம்மையுடன் மீண்டும் ஆலயத்திற்கு வந்து நாய்க்குட்டி பொம்மையை நாய் வாகனத்திடம் வைத்துவிட்டு நிறைவான மனதுடன் தங்கள் இல்லம் திரும்புவார்கள்.
அப்படி குழந்தை செல்வத்தை அடைந்தவர்கள் வைத்து விட்டுப்போன கல்நாய்க் குட்டி பொம்மைகள் நூற்றுக் கணக்கில் ஆலயத்தில் இருப்பதை இப்போதும் காணலாம்.
குழந்தை செல்வம் வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஆலய அர்ச்சகரை அணுகினால், அவர் பூஜாக்கிரமங்களை விரிவாக எடுத்துரைப்பதுடன் பூஜையையும் நடத்தி வைப்பார்.
பக்தி சிரத்தையுடன் நம்பிக்கையும் கொண்டு ஸ்ரீ காளிகா தேவி சமேத ஸ்ரீ கால பைரவ சுவாமியை வழிபடும் தம்பதியர் குழந்தைச் செல்வம் பெறுவது உறுதி என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பலன் அடைந்த தம்பதியர்கள்.
- ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத் யோஜதம், அகோரம் ஆகியவை ஈசனின் 5 முகங்களை குறிக்கும்.
- ராமகிரி கால பைரவர் ஆலயம் ஈசனின் பஞ்சமுக ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சிவபெருமான் 5 முகங்களை கொண்டவர்.
ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத் யோஜதம், அகோரம் ஆகியவை ஈசனின் 5 முகங்களை குறிக்கும்.
ராமகிரி கால பைரவர் ஆலயம் ஈசனின் பஞ்சமுக ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதன்படி ஈசான முகம், ராமகிரி வா லீஸ் வரரை பிரபலிக்கிறது.
சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிக் கொண்டீஸ்வரர் தத் புருஷ முகமாகவும், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ முகமாகவும் அரிய துறையில் உள்ள வர மூர்த்தி சத்யோஜத முகமாகவும் மீஞ்சூர் அருகே காட்டூரில் உள்ள சிந்தா மணீஸ்வரர் அகோர முகமாகவும் கருதப்படுகிறார்.
இந்த 5 முகங்களையும் கொண்ட 5 ஆலையங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது நல்லது என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
- நாராயண வனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது.
- நாராயண வனத்தில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தர் ஆலயமும் சிவாலயமும் அமைந்துள்ளது.
அற்புதங்கள் நிறைந்த ராமகிரி கோவிலுக்கு சென்னையில் இருந்து மிக எளிதாக சென்று வரலாம்.
சென்னையில் இருந்து காரில் செல்பவர்கள் செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக சென்றால் மிக எளிது.
ஊத்துக் கோட்டையை தாண்டியதும் நாகலாபுரம் வரும்.
அதை கடந்ததும் ராமகிரி ஊர்தான். சாலையின் வலது பக்கத்தில் பெரிய அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது.
அதன் வழியாக உள்ளே சென்றால் அந்த பாதை கோவிலில் சென்றுதான் நிற்கும்.
பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி செல்லும் பஸ்களில் செல்லலாம்.
எக்ஸ்பிரஸ் பஸ்களில் செல்லாமல் சாதாரண பஸ்களில் சென்றால் ராமகிரி பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவார்கள்.
அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பூண்டி, சீத்தஞ்சேரி, கச்சூர் வழியாக ஊத்துக்கோட்டைக்கு சென்று ராமகிரி செல்லலாம்.
சென்னையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் ராமகிரி தலம் உள்ளது.
திருப்பதியில் 58 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூரில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைலிலும் அமைந்துள்ளது.
அருகில் உள்ள பீச்சாட்டூரில் இருந்து 4 கிலோ மீட்டர் கடந்தால் இந்த தலத்தை அடையலாம்.
நாராயண வனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது.
நாராயண வனத்தில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தர் ஆலயமும் சிவாலயமும் அமைந்துள்ளது.
திருப்பதி, திருத்தணி, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களுக்கு மையமாக ராமகிரி அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ராமகிரியில் வழிபாடு செய்து விட்டு அருகில் உள்ள இந்த தலங்களுக்கும் சென்று வரும் வகையில் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது.






