என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • ஒரு முறை ‘சிறந்தது இல்லறமா? துறவறமா?’ என்ற தர்க்கம் எழுந்தபோது, ‘துறவறமே சிறந்தது!’ என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி.
    • மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான்.

    ஒரு முறை 'சிறந்தது இல்லறமா? துறவறமா?' என்ற தர்க்கம் எழுந்தபோது, 'துறவறமே சிறந்தது!' என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி.

    மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான்.

    'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான். அதன்படி பூமியில் ஏழையாகப் பிறந்து உணவுக்கு வழியில்லாமல் துன்புற்றார் பிரகஸ்பதி.

    இந்த நிலையில் ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது. அவர் அதை விரட்டினார். கோபம் கொண்ட நாய், 'நீ நாயாக பிறப்பாய்!' என்று அவரை சபித்தது.

    இதனால் மிகவும் வருந்திய பிரகஸ்பதி இறுதியில், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாராம். எனவே, இங்கு வழிபட்டால் குரு தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொண்டரடிப்பொடி வாயில் கோபுரம், ஸ்ரீகருடன் சந்நிதி வாயில் கோபுரம் உட்பட இன்னும் 4 கோபுரங்களும் உண்டு.

    புண்ணியகோடி விமானமும், புனரமைக்கப்பட்டு 27.1.1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.
    • இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.

    இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.

    முனி குமாரர்கள் இருவர் முனிவரின் சாபத்தினால் பல்லிகளாகி இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு.

    அவர்களின் நினைவாக இந்திரன் தங்கத்தால் ஆன பல்லி ஒன்றையும், வெள்ளியால் ஆன பல்லி ஒன்றையும் இங்கே ஸ்தாபித்தான்.

    ஆயினும் இப்போது தங்கப்பல்லி மட்டும்தான் உள்ளது.

    இதைத் தொட்டு வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நம் தலைக்கு மேலே, உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளம் உள்ள தங்கப்பல்லியை, படிகளில் ஏறிக் கையால் அதன் உடல் முழுவதும் தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது.

    இதனால் வடமாநிலத்தவர்கள் இத்தலத்தை பல்லி கோவில் என்றே அழைக்கிறார்கள்.

    இக்கோவிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது ஆதி அத்தி வரதர்.

    வரதராஜ பெருமாள் ஆலயத்தின் உள்ளே இருக்கும் அனந்தசரஸ் புனித குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

    ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில்.

    இக்கோவிலின் நூறுகால் மண்டபத்தின் அருகில் நீருக்கு அடியில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார்.

    இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

    பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து 24 நாட்களுக்கு சயன மற்றும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.

    பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.

    தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார்.

    ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். 

    • காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
    • மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

    மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு இக்கோவில் சிறப்பு வாய்ந்தது.

    ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரம்மா தன் மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.

    அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.

    அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.

    பிரம்மாவின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.

    பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார்.

    பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார்.

    வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார்.

    வரதராஜபெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

    • தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.
    • இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமாணிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன.

    இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

    அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.

    முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோவிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.

    அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.

    இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும்.

    இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.

    காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.

    • இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது.
    • இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்ச்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.

    திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

    வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.

    இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பத்தோராவது திவ்ய தேசமாகும்.

    வரலாறும் சிற்பக்கலையும்

    இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை.

    எனினும் கி பி 1053 இல் சோழகளால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.

    முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர்.

    பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.

    சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

    கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.

    தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது.

    இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்ச்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.

    கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

    மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

    மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்ப்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.

    பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம்.

    மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரத்தாழ்வர் சன்னிதியும் உள்ளது.

    • நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளைப் பெறலாம்.
    • எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழகி, ஜீவ காருண்யத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

    1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

    2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

    3. ஸ்ரீதான்யலட்சுமி: - ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெபறலாம்.

    4. ஸ்ரீவரலட்சுமி: - உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

    5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

    6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

    7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

    8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

    9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடியாது என்று சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

    10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

    11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

    12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

    13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

    15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

    16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

    • எப்படி அழைத்தாலும் வரக் காத்திருக்கும் லட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும் பூஜை செய்யலாம்.
    • துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரகள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

    எப்படி அழைத்தாலும் வரக் காத்திருக்கும் லட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும் பூஜை செய்யலாம்.

    துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரகள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

    முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும்.

    அதை சொல்லிய பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    1. சகலசித்தியளிக்கும் ஆதி லட்சுமியே போற்றி!

    2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!

    3. ராஜமரியாதை தரும் கஜலட்சுமியே போற்றி!

    4. செல்வச் செழிப்பைத் தரும் தனலட்சுமியே போற்றி!

    5. தான்ய விருத்தியளிக்கும் தான்யலட்சுமியே போற்றி!

    6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும் விஜயலட்சுமியே போற்றி!

    7. சவுபாக்கியங்கள் தரும் மகாலட்சுமியே போற்றி!

    8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும் வீரலட்சுமியே போற்றி!

    9. அனைத்து நன்மைகளையும் வரமாகத்தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!

    • அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான்.
    • நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன்.

    அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான்.

    இதை விளக்குவதற்கு ஒரு கதை. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது.

    அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான்.

    ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான்.

    அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம்.

    நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள்.

    சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான்.

    மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை.

    ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லட்சுமி வந்தாள்.

    அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன்.

    பக்தன் கேட்ட வரத்தின்படி தைரிய லட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள்.

    மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக் கொண்டு பூஜைக்கு போனான்.

    அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான்.

    நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன்.

    எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது.

    நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்.

    • வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூற தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தது.
    • வேறு வழியின்றி ‘கொடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று மனம் வருந்திக்கூறினாள்.

    மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது.

    அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் ரொம்ப விசேஷம்.

    அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் 'ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம' என்று சொல்லிவிட்டுப் பயன்படுத்தினால் நம்மிடம் எப்போதும் பணம் இருந்து கொண்டேயிருக்கும்.

    மிகவும் சின்ன வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர்.

    துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்துக்கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார்.

    அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது. அவர் போனபோது சோமதேவர் வீட்டில் இல்லை.

    வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள்.

    அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் 'பவதி பிசோந்தேஷி!' என்றார்.

    வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூற தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தது.

    வேறு வழியின்றி 'கொடுப்பதற்கு ஒன்றுமில்லை' என்று மனம் வருந்திக்கூறினாள்.

    அதைக்கேட்ட சங்கரர் 'அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை.

    உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்'! என்றாரர்.

    வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை.

    எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது. அதைக் கொண்டுபோய் ஆதி சங்கரருக்கு வழங்கினாள்.

    'அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்' என்றார் சங்கரர்.

    இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தர வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

    அவ்வாளவு தான். வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின.

    'கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்' என்று கூறி லட்சுமி மறைந்தாள்.

    தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!

    இதை விளக்க ஒரு கதை உண்டு.

    பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துகொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது.

    நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளி வாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

    தான்ய லட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று.

    அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின.

    சந்தானலட்சுமி வெளியேறியதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர்.

    தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர்.

    அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன்.

    கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள்.

    அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, ''தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!'' என்று கதறினான்.

    அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள்.

    அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர்.

    இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் அந்தப் பணக்காரன்.

    தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!

    • ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.
    • அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்றுபொருள்.

    மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம்.

    மங்களகரமானபொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

    மஞ்சள் கலந்த மந்திராசத்தை & மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

    பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது.

    குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.

    ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.

    அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்றுபொருள்.

    +திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம்.

    ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

    ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர்.

    இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.

    வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

    கோலம் போடும் பழக்கம் என்பது பண்டுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப்பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

    மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது.

    புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர்.

    ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.

    • இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் செல்வ வளம் சேரும்.
    • மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

    பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.

    எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?

    வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும்.

    பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.

    நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம்.

    ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வர வழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.

    இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள்.

    இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.

    இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும்.

    சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும்.

    குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    ×