என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
- அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.
திருக்குடமுழுக்கில் கருடன்
நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.
அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர்.
கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன்.
வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும்.
ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குடமுழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
கோவில் கொடியேற்றத்தில் கருடன்
நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம்.
அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.
அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.
இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.
- மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கையில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
- அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார்.
ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வண்மையும் அருளப் பெற்றார்.
அப்போது ஒருமுறை, காசி மாநகரில் ஸ்ரீகுமரக் கடவுளுக்கு ஒரு மடம் அமைப்பதற்காக, அப்பகுதியை ஆண்டு வந்த முஸ்லிம் அரசனைப் பார்க்க அவனது அரசவைக்குச் செல்ல விரும்பினார் ஸ்ரீ குமரகுருபரர்.
அப்பொழுது அவருக்கு வாகனமாக ஒரு சிங்கமே வந்தது.
அதில் ஏறியபடி கம்பீரமாக அரண்மனையை அடைந்தார் சுவாமிகள்.
அரசனோடு சேர்ந்து அவையே அச்சம் அடைந்தது.
இருப்பினும் ஒரு இந்து துறவிதானே என அலட்சியத்துடன் அவரிடம் உருது மொழியில் உரையாடினார் அரசர்.
கலைவாணியின் அருளால் ஸ்ரீகுமர குருபரரும் அம்மொழியிலேயே பதில் அளித்தார்.
அதைக் கண்டு மேலும் அதிர்ந்தார் அரசர்.
இனி அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டியதுதான் என்னும் நிலையில், அவ்வரசர் ஒரு வித்தியாசமான நிபந்தனையுடன் மடம் அமைக்க நிலம் தருவதாக ஒப்புக் கொண்டார்.
அது, காசியில் நாளைக் காலையில் கருடன் எவ்வளவு தூரம் வானில் வட்டம் இடுகிறதோ அந்த பகுதிகள் முழுவதையும் தானம் அளிப்பதாக அரசர் அறிவித்தார்.
காசியில் கருடன் பறக்காது என்னும் இந்துக்களின் நம்பிக்கையையும், அவர் அப்படிப் பறந்து ஒரு போதும் காணாததாலும், அப்படிக் கூறி சாமார்த்தியமாக தானம் தருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினார்.
மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கையில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று ஒரு கழுகு தோன்றி, அரசர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காசியின் பெரும் பகுதி இடங்களை சுற்றி வளைக்கும் அளவிற்கு வட்டமிட்டு மறைந்தது.
அரசருக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார்.
அந்த மடம் ஸ்ரீகௌமார மடம் என்னும் பெயரில் காசியில் இன்றும் உள்ளது.
இதனை இந்துக்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீகருட பகவானையே சாரும்.
வேத வியாச மகிரிஷி, உலக மக்களின் நன்மைக்காக, வேதங்கள் கூறும் தர்மங்களை புராண வடிவங்களாக்கி, அவற்றை பதினெட்டு பெயர்களில் படைத்து அருளி உள்ளார்.
அவற்றுள் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், வராக புராணம், கருட புராணம் ஆகிய ஆறும் சத்துவ குணம் பொருந்தியவை என்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பற்றியவை என்றும் வழங்கி வருகின்றனர்.
அவற்றுள்ளும் கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
இந்த கருட புராணத்தில், கருட பகவான், "இவ்வுலகில் மனிதர்கள் ஏன் பிறக்கின்றனர்? அவர்கள் இறந்த பின் சிலர் நரகத்திற்கும் சிலர் சொர்க்கத்திற்கும் செல்வது எதனால்?
சிலர் இரண்டிற்கும் செல்லாமல் பிரேத ஜென்மமாக ஆவியுருவில் அலைவது எதனால்? இந்த ஜென்மம் நீங்க என்ன செய்ய வேண்டும்?
முக்தியை அடைய என்ன செய்ய வேண்டும், மரண காலத்தில் முன் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டு முக்தி அடைய வழி ஏதாவது உண்டா?
அத்தருவாயில் யாரை நினைக்க வேண்டும்? என்று ஸ்ரீமந் நாராயணனிடம் உலக மக்களுக்காகக் கேட்டார்.
- கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.
- கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.
1. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். "காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ" என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.
2. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.
3. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.
4. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.
5. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.
6. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.
7. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.
8. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.
9. கருடன் மட்டுமே இறக்கையை அசைக்காமல் பறக்கும். கருடனின் நிறம் பழுப்பு.
10. கழுத்து வெள்ளை. பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.
11. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.
12. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.
13. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.
14. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.
15. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.
16. விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷயங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் தானே கருடன் என்ற கருடோஹம் பாவனையில் பலவகை கருட மந்திரங்களையும் லட்சக்கணக்கில் ஜபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.
17. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.
18. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.
19. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது. கருடனுக்குக் கோபம் வந்தால் சிறகுகளை உதறிப் பறக்கும்.
20. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!
ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.
- ராமாயணப் போரில் லட்சுமணன் நாகாஸ்திரத்தினால் கட்டுண்ட போது அவரை கருடன் விடுவித்தார்.
- அமுத கலசத்தைப் பெற கருடன் இந்திரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றார்.
ஸ்ரீ கருடனுக்கு ஐந்து எழுத்துக்கள் கொண்ட 'பஞ்சவர்ணீ' என்ற மந்திரம் இருக்கிறது.
கட மந்திரமான 'கருட பஞ்சாட்சரி'க்கு உடனே பலன் தரும் அபூர்வ சக்தி உண்டு.
இந்த மந்திரம் 'காருட பிரம்ம வித்யா' என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.
திருமாலுக்கு எதிரே எல்லாக் கைங்கரியங்களையும் செய்வதற்குக் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ கருடன் நிற்பதை வைணவ ஆலயங்களில் காணலாம்.
ராமாயணப் போரில் லட்சுமணன் நாகாஸ்திரத்தினால் கட்டுண்ட போது அவரை கருடன் விடுவித்தார்.
அமுத கலசத்தைப் பெற கருடன் இந்திரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றார்.
தோற்றுப் போன இந்திரன் கருடனைப் பாராட்டி அவருக்கு 'சுபர்ணன்' என்ற பெயரைச் சூட்டினான்.
'கருடோப நிஷத்தை ஆறு மாதம் தியானம் செய்பவன் கருட பகவானுக்குச் சமமாகிப் பார்வையாலேயே உலகை வசம் செய்வான்.
சந்திரகாந்தப் பிரதிமை போன்ற தேவியின் தியானத்தால், எல்லா வித ஜூரங்களையும் விஷயங்களையும் போக்கும் வல்லமை பெறுவான்' என்று கருட உபநிஷத்தின் பலன் கூறுகிறது.
அதிகாலையில் அருணோதய சமயத்தில் கருடனைத் தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும்.
வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் 'கருட பஞ்சாத்' படிப்பது அமோக பலனைத் தரும்.
சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.
பத்ம புராணத்திலுள்ள நான்கு பாடல்கள் கருடன் அருளால் மனிதர்களுக்கு ஏற்படும் பல அபூர்வ சக்திகளைப் பற்றி கூறுகின்றன.
அவை வருமாறு:
பிறரை வசியம் செய்தல், பகைவர்களை அடக்குதல், உணர்வை வற்ற செய்தல், வானத்தில் உலாவுதல், இந்திர ஜாலம் காட்டுதல், படிப்பில் தேர்ச்சி நல்ல நினைவாற்றல், வாதத்திலும் போரிலும் வெற்றி பெறுதல் போன்றவை சித்திக்கும்.
வீட்டுக்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து தியானித்து கைகளைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.
ஸ்ரீ கருட பகவானைத் தனியாக வணங்கும் போது பின்வரும் துதியைச் சொல்லி வணங்குவது மிகவும் விசேஷம்.
'கருடாய நமஸ்துய்யம் ஸர்து
சர்பேந்த்ர சத்ரவே!
வாஹனாயா மஹாவிஷ்ணோ!
தார்சஷ்யாய அமித தேஜயே!
- எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார்.
- ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார்.
திருப்பதி கோவிலின் இடப்பக்கத்திலே திருக்குளம் வெட்டும் பொழுது அங்கிருந்த ஒரு மரத்தில் முனீஸ்வரன் குடி கொண்டிருந்ததாகவும், மரத்தை வெட்டினால் முனிஸ்வரன் வெகுண்டு அத்தலத்திற்குத் தீங்கிழைத்து விடக் கூடுமாதலால், அம்முனீஸ்வரரைப் பாதமாகச் செதுக்கி அம்முனீஸ்வரருக்கு காவலாகத்தான் மூலைக்கெருடனை அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இச்செய்தி செவிவழிச் செய்தியாயினும், மூலைக்கெருட பகவானின் அபார சக்தியை நோக்குங்கால், உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.
எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார்.
ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார்.
இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று 'மஹா சுவாதி' என கருடனின் ஜென்ம நட்சத்திர வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தர்களின் வேண்டுதல்களை அவ்வப்பொழுது நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவற்றில் உடைத்து நன்றி செலுத்துகின்றனர்.
இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல், பில்லி, சூனியம், மனவியாதி அகலும். சத்ரு பயம் நீங்கி, வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கருடனின் வீரம்
கருடனின் வீரம் மிகப்பெரியது. இவரை நினைத்தாலே விஷ ஜந்துக்களில் முக்கியமாக பாம்பினால் துன்பம் ஏற்படாது.
கருட பஞ்சாட்சரி மந்திரம் இவரைப் பற்றியது. இம் மந்திரம் மந்திரங்களில் சிறந்தது என்பார்கள்.
"கருடன்" என்றால் சிறகுகளைக் கொண்டு பறப்பவன் என்று பொருள். வைணவர்கள் கருடனை "வரதா, வரதா" என்று சேவிப்பார்கள்.
உண்மையான பக்தர்கள் இறைவனுக்கு ப்ரீதியாகி, உன்னத நிலை அடைவர் என்பதற்கு கருடனே சிறந்த உதாரணம்.
- பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
- முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும்.
அமாவாசை விரதங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசை ஆகிய மூன்றும் விசேஷமானவை.
அமாவாசையன்று, காலையில் எழுந்து குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள்.
அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.
அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள்.
அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற்றிருக்கும்.
விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
தரையிலோ, எட்டும் இடங்களிலோ வைத்தால் நாய்கள், பன்றிகள் தின்றுவிடும்.
முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.
காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டுமேயழிய, பிறருக்கு தானமாகத் தரக்கூடாது.
அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது.
பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இந்த சன்னதியில் அபூர்வமான மகாலட்சுமி சாலக்கிராமம் உள்ளது.
- இந்த சுவாமி எளிமையாக இதனை மட்டும் ஏற்று பித்ருக்களைத் திருப்தி செய்து வைப்பதாக ஐதீகம்.
வணங்க வேண்டிய தலம்:
நென்மேலி (நெம்மேலி)
இருப்பிடம்:
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பேருந்து சாலையில் உள்ளது.
மூலவர்: ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்
உற்சவர்: ஸ்ரார்த்த சம்ரக்ஷண நாராயணர்
தீர்த்தம்: அர்கிய புஷ்கரணி
சேஷத்ரம்: சம்ரக்ஷண சேஷத்ரம்
விருக்ஷம்: அக்ஷய வடம்
ஆராதனம்: வைகானச ஆகமம்.
தல வரலாறு:
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த யாக்ஞ வல்கியரை குருவாகக் கொண்டு வாழ்ந்து வந்த யக்ஞ நாராயண சர்மா சரசவாணி என்ற தம்பதிகள் விஷ்ணுவின் மீது பெரும் பக்தி கொண்டு இருந்தனர்.
இவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தையும், தெய்வத் திருப்பணிகளுக்குச் செலவு செய்தனர்.
எனவே அரச தண்டனைக்கு ஆளானார்கள். அரச தண்டனையை ஏற்க மனமில்லாததால் திருவிடந்தை என்ற திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்கள் உயிர் துறப்பதற்கு முன்பாக தாங்கள் இறந்த பின்பு தங்களுக்கு ஈமக்கரியைகளைச் செய்ய வாரிசு இல்லையே என மனம் வருந்தினர்.
அவர்களுடைய கடைசி கால ஆசையை நிறைவேற்ற எம்பெருமானே முன்னின்று கிரியைகள் செய்து வைத்ததாக பெருமானே சாட்சியம் கூறினார்.
அதன் வழியே இன்றும் தன் சன்னதியில் அந்த வழி வந்தவர்களே தீர்த்தம், பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிக்கிறார்கள்.
மேலும் இந்த சன்னதியில் அந்த திவானின் வேண்டுகோளுக்கிணங்க வாரிசுகள் இல்லாதவர்களுக்கும், சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்கும், தானே முன்னின்று சிரார்த்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் (பகல் 12 மணி முதல் 1 மணி வரை) ஒரு காலம் ஆராதனம் மட்டும் ஏற்று விரதமிருக்கிறார்.
இந்த சன்னதியில் அபூர்வமான மகாலட்சுமி சாலக்கிராமம் உள்ளது.
தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் தொழில் மேன்மையும், வியாபார அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும், குடும்ப அமைதியும் கிடைக்கும்.
இங்கு சிரார்த்தம் செய்ய விரும்புபவர்கள் அர்ச்சகரிடம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த பூஜை பகல் 12 மணிக்கு நடைபெறும். கலந்து கொள்பவர்கள் காலை 11.30 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
இங்கு சிரார்த்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடைபெறும், பூஜையில் தங்கள் பித்ருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரக்ஷணமாகும்.
இந்த சுவாமிக்கு நிவேதிக்கப்படும் வெண் பொங்கல் அல்லது தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் வைத்த துவையலும் சிரார்த்த தளிகையாகும்.
இந்த சுவாமி எளிமையாக இதனை மட்டும் ஏற்று பித்ருக்களைத் திருப்தி செய்து வைப்பதாக ஐதீகம்.
தினமும் நடைபெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியன்று கலந்து கொள்வதோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் செய்து வைப்பதோ 'கயா' சென்று சிரார்த்தம் செய்த பலனைக் கொடுக்கும்.
- சிலர் உடன்பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.
- புற்றுக்குப் பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
ஆடி மாதம் வளர்பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாகத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதம்.
இதனால் நாக தோஷங்கள் அகலும், மகப்பேறு கிடைக்கும்.
நாக சதுர்த்தியன்று நாகக்கல்லைப் பிரதிஷ்டை செய்தால் மகப்பேறு கிடைப்பது உறுதி.
விரதப்பயனால் பிறந்த குழந்தைகளுக்கு நாகசாமி, நாகப்பன், நாகராஜன், நாகலட்சுமி, நாகம்மை என்று நாகத்தின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.
சிலர் உடன்பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.
புற்றுக்குப் பால் வார்த்து, புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
வடநாட்டில் கொண்டாடப்படுகிற ராக்கி அல்லது ரட்சாபந்தனுக்கு நிகரானது நாக சதுர்த்தி விரதம்.
- இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு.
- இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
நாகராஜா மற்றும் நாகரம்மன் என்னும் நாக தெய்வத்தின் பெயரையே தனதாக்கின் கொண்ட திருத்தலம் "நாகர்கோவில்" ஆகும்.
இத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராக விளங்குகிறது.
இந்த நாக தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செய்வதன் மூலம் (உப்பு, மிளகு சமர்ப்பித்தல்) தோல் வியாதிகள் நீங்குவதோடு, உடல் உறுப்புகளும் நலம் பெறும் என்று நம்பிக்கை காலங்காலமாக இப்பகுதி மக்களிடையே பரவிக் கிடக்கிறது.
நாகர்கோவிலின் மத்தியில் அமைந்துள்ள இந்த நாகராஜர் ஆலயத்தில் ஐந்து தலை நாகராஜர் மூலவராகக் காட்சி தருகிறார்.
மூலவரைச் சுற்றி எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படுகிறது.
அர்ச்சகர் அந்த நீரில் நின்று கொண்டுதான் வழிபாடுகள் செய்கிறார்.
இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
இதிலிருந்து எடுக்கப்படும் மண்ணே பக்தர்களுக்குப் பிரசாதமாகத்தரப்படுகிறது.
இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு.
குடும்ப குலதெய்வம் தெரியாதவர்களும் இவரை வணங்குகின்றனர்.
இத்தலத்தில் ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு கேரளா மற்றும் தமிழ்நாடு மக்கள் வந்து வழிபாடுகள் செய்கின்றனர்.
ஒன்பது ஆயில்ய நட்சத்திர நாட்களில் விரதமிருந்து நாகரை வழிபட பிள்ளைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் முகப்பில் காணப்படும் நாகர் சிலைகளால் சூழப்பட்ட இரு அரச மரங்களை மகப்பேறு வேண்டுவோர் சுற்றி வலம் வந்து வழிபடுகின்றனர்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் நகரம் திருவிழாக் கோலத்துடன் காட்சியளிக்கும்.
இந்த ஆலயத்தை நாகங்கள் காவல் புரிவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
இத்தலத்தில் உள்ள ஐந்து தலை நாகம் போன்று காட்சியளிக்கும் நாகலிங்கப்பூவை நாகராஜரின் உருவ அடையாளமாகவே எண்ணுகின்றனர்.
ஆலயத்தில் நிறைய நாகலிங்க மரங்கள் உள்ளன. இந்தப் பூவைக் கொண்டே நாகராஜருக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
தற்போது மூலவர் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் புல்லும் புதரும் மண்டிக்கிடந்ததாம்.
அங்கே புல்லறுத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் அரிவாள்பட்டு, புதருக்குள்ளிருந்த ஐந்து தலை நாகத்தின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டதாம்! அதைக்கண்டு அஞ்சிய அந்தப் பெண் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த இடத்தில் சிறு கோவில் கட்டி வணங்க ஆரம்பித்தனர்.
அவ்வாறு உருவானதே இந்தக் கோவில் என்கிறார்கள்.
- பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான்
- காஞ்சி கருட சேவை என்பது உலகப்பிரசித்தம் .
1. புராணங்களில் இத்தலம் ஸத்யவ்ருத ஷேத்திரம் என்றே அறியப்படுகிறது. இங்கு செய்யும் பாவ புண்ணியங்களுக்கு 100 மடங்கு பலன் என்பதாலேயே அப்பெயர்.
2. காஞ்சி மாநகர் சோழ பல்லவ ஆட்சி காலத்தில், நான்கு நகரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது: புத்த காஞ்சி, ஜைன காஞ்சி , சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி. காஞ்சிபுரத்தின் மையமான தேரடி வீதிக்கு தெற்கே விஷ்ணு காஞ்சியும், வடக்கே சிவ காஞ்சியும் அமைந்துள்ளன.
3. ப்ரம்மா யாகம் செய்தது, கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் இருக்கும் திருகுளத்து கரை மண்டபத்தில். சரஸ்வதி நதியின் சீற்றத்தை ஆதிசேஷன் ஆயிரம் தலை கொண்டு தடுத்ததால், அனந்த சரஸ் என்று பெயர்கொண்டது அந்த குளம்.
4. யாகத்தின் இறுதியில், யாக குண்டத்தில் தோன்றியவர் தான் தேவாதிராஜன் என்று இன்றும் வணங்கப்படும் உற்சவர். நெருப்பினால் உண்டான வடுக்களை இன்றும் ஸ்வாமியின் திருமுகம் தெளிவாக காணலாம்.
5. மற்ற எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத மகிமையாய், இங்கு இவர் ராஜாதி ராஜனாக ஆட்சி செய்கிறார். தேசத்தை ஆளும் மன்னருக்குண்டான அனைத்து சடங்குகளும் இவருக்கு உண்டு. பெருமாள் என்பதை விட ராஜன் என்றே அதிகம் கொண்டாடப்படுகிறார். பெருந்தேவி தாயார் பட்டமகிஷி.
6. பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான். 'கஜேந்திர மோட்ஷம்' காஞ்சி சாசனம்.
7. 'ப்ரம்மா' ஒவ்வொரு வருடமும் வந்து பூஜிக்கும் பத்து நாட்களும் 'ப்ரம்ம உட்சவமாக கொண்டாடப்படுவது தொடங்கியது இங்கே தான். 10 நாட்களுக்கான பூஜை முறைகள் ப்ரம்மா வகுத்த விதி. இதை பின்பற்றியே அனைத்து வைணவ கோவில்களிலும் இந்த உட்சவம் நடக்கிறது.
8. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் விசேஷமும் முதல் முதலில் தொடங்கியது இங்கே தான். காஞ்சி கருட சேவை என்பது உலகப்பிரசித்தம் .
9. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருப்பது போலவே, வேதாந்த தேசிகர் அவதரித்த 'தூப்புல்' என்ற தலமும் மிக அருகிலேயே உள்ளது.
10. 108 திவ்யா தேசங்களில் ஒன்றான பரமபதத்தை சேவிக்க முடியாது, ஏனெனில் அது பூலோகத்தில் இல்லை. ஆகவே வருடத்திற்கு ஒருமுறை, தேவாதிராஜன் இங்கு பரமபத நாதனாக சேவை சாதிக்கிறான்.
- இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!
- இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது.
மாட வீதி எனப்படும் வெளிப்பிராகரத்தில் மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடப்புறம் நூற்றுக்கால் மண்டபம்.
முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பனை செய்யும் பெண், விஸ்வாமித்ரர் யாகம், சீதா கல்யாணம், வாலி வதம், ராமபிரானின் கணையாழியை சீதாவிடம் தரும் அனுமன், கிளி வாகனத்தின் மீது ரதிதேவி, அன்ன வாகனத்தின் மீது மன்மதன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வரும் அனுமன் மற்றும் தசாவதார காட்சிகள் என்று சிற்ப களஞ்சியமாகத் திகழ்கிறது நூறு கால் மண்டபம்.
இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!
இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது.
இவற்றையும் சேர்த்தே நூறுகால்! விசேஷ நாட்களில் உற்சவ மூர்த்தியர் இந்த மேடையில் எழுந்தருள்கின்றனர்.






