என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கருட வழிபாட்டை மேற்கொண்டு கருடாழ்வாரின் அருளைப் பெறுங்கள்
    X

    கருட வழிபாட்டை மேற்கொண்டு கருடாழ்வாரின் அருளைப் பெறுங்கள்

    • ஆனால் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு மட்டும் அவ்வளவாகக் கொண்டாடுவதாக தெரியவில்லை.
    • எனவே இனியேனும் கருட வழிபாட்டை பக்த கோடிகள் கடைப்பிடித்து கருடாழ்வாரின் அருளாசியை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார்.

    மற்ற தெய்வங்களின் சிறப்பு வழிபாடு போல கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

    இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடை பிடித்து ஸ்ரீ கருடபகவானின் அருளாசிக்குப் பாத்திரமாக வேண்டும்.

    பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி அம்பாள் பூஜை, அமாவாசை அனுமன் வழிபாடு, விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு, அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு, சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு, சஷ்டியில் முருக வழிபாடு, ஏகாதசியில் விஷ்ணு வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம்.

    இது போல இன்னும் ஏராளம், ஏராளமான தெய்வ வழிபாடுகள் கொண்டாடப்படுகின்றன.

    ஆனால் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு மட்டும் அவ்வளவாகக் கொண்டாடுவதாக தெரியவில்லை.

    எனவே இனியேனும் கருட வழிபாட்டை பக்த கோடிகள் கடைப்பிடித்து கருடாழ்வாரின் அருளாசியை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஸ்ரீ கருட வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் அவரின் திதி, நட்சத்திரத்தில் கொண்டாடலாம்.

    மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.

    மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் கருட வழிபாட்டை செய்து அவரின் அருளாசியால் சகல நன்மைகளையும் பெறலாம்.

    கருட பகவானுக்கு பிடித்தமான அபிஷேக ஆராதனைகள், பலகார பட்சணங்கள் போன்றவற்றைச் சிறப்பாக சமர்பித்து அவரது அருளைப் பெறலாம்.

    Next Story
    ×