என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
    • ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.

    அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.

    இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.

    முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை.

    இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.

    இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.

    பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

    • சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
    • எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.

    விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும்.

    உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.

    ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.

    சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

    எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.

    திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.

    தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.

    எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

    திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள்.

    • குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது.
    • செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.

    குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது.

    செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.

    இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகுக்கிறது.

    ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

    ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.

    உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

    பாவை விளக்கு

    ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்ருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது.

    இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

    • பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
    • பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    விளக்குகளில் இது புனிதமானது. எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு.

    பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.

    பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.

    புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப் பந்தலை வலம் வரும் போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சியம்மன் திருவிளக்கே.

    புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி" எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.

    பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

    விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

    • கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர்.
    • கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருடம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.

    கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது.

    திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள்.

    அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள்.

    கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர்.

    கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருடம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.

    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே! என்ற சுலோகத்தை சொல்வது மிகவும் விசேஷமான பலனை தரும்.

    திருக்கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

    கார்த்திகை திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப் பாகும், தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.

    வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல் கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன.

    ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

    • இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.
    • எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.

    தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால் இது தாலி என பெயர் பெற்றது.

    இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.

    எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.

    அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.

    இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து இருக்கும்.

    தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டும் இது காணப்படுகிறது.

    சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாள் அளவில் இது மங்கி போகும்.

    ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும் விதத்தில் தான் இருக்கின்றது.

    • அதே போல் பெண்களின் கழுத்தில் கட்டப்படுவதால் தாலி என பெயர் பெறுகிறது.
    • இன்றுதான் தங்கம் + மஞ்சள் சரடுடன் பெண்கள் கழுத்தில் கட்டப்படுகிறது.

    திருமணம் ஆன தம்பதியர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் புதிய தம்பதியர்கள் போல் நினைத்து வாழ்ந்து வந்தோமானால் மனமகிழ்ச்சியோடும் பிறர் போற்றும் படியும் வாழலாம்.

    கையில் அணிவது வளையல், கைவிரலில் அணிவது மோதிரம், காலில் அணிவது கொலுசு, கால் விரலில் அணிவது மெட்டி என்று கூறுகிறோம்.

    அதே போல் பெண்களின் கழுத்தில் கட்டப்படுவதால் தாலி என பெயர் பெறுகிறது.

    இன்றுதான் தங்கம் + மஞ்சள் சரடுடன் பெண்கள் கழுத்தில் கட்டப்படுகிறது.

    தங்கம் கண்டு பிடிப்பதற்கு முன்பாக மங்கையர் கழுத்தில் மஞ்சள் கிழங்கு + மஞ்சள் பூசப்பட்ட நூலாலும் தாலியாக கட்டப்பட்டது.

    அதற்கும் முன்பாக அதாவது மஞ்சள் கிழங்கிற்கு முன்பாக பண்டைய காலத்தில் தாளை பனைமரம் ஓலையைதான் தாலியாக கட்டினார்கள்.

    அதாவது ஒரு பக்கத்தில் மணப்பெண்ணும், மணப்பெண்ணின் வீட்டாரும் உறவினர்களும், மறுபக்கத்தில் மணமகனும் மணமகன் வீட்டாரும், உறவினர்களும் மற்றும் ஊர் பெரியோர்களும், ஊர்காரர்களும் முன்னிலையில் தாளைபனை மரம் ஓலையில் இன்னாருடைய (தந்தை தாய் பெயர்) மகளை (மணமகள் பெயர்) இன்னாருடைய (மணமகன் தந்தை தாய் பெயர்) மகனுக்கு (மணமகன் பெயர்) ஊர் பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என எழுதுவார்கள்.

    அந்த ஓலையை மடித்து தாளை பனைமர ஓலையின் நாரை கிழித்து கட்டி மணமகன் கையில் தரப்படும்.

    மணமகன் அங்கு கூடி இருப்போர் முன்பாக மணமகள் கழுத்தில் கட்டுவார்.

    • திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.
    • விருந்து ஒன்பால் என்பது விருந்து உபசரித்தல் என்று பொருள்.

    அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் மரபு உண்டு.

    ஏன் என்றால் அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரண கண்களுக்கு ஒரு நட்சத்திரம் போல் காட்சியளிக்கிறது.

    ஆனால் அதையே நுண்ணோக்கு கருவியால் கண்டால் இரு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும்.

    இதைத்தான் இரு உடல் ஒரு உயிர் என்பார்கள்.

    அதாவது கணவன்+மனைவி இருவரும் இரு உடலாக இருந்தாலும் ஒரு உயிராக ஒற்றுமையுடனும் அன்யோன்யமாக 16 செல்வங்களையும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்பதே இந்த மரபில் மறைந்து இருக்கும் மறைபொருள் ஆகும்.

    திருமணம் என்பது வெறும் இனபெருக்கம் செய்யும் செயல்தான் என்று எல்லோரும் நினைப்பது தவறான கருத்தேயாகும்.

    திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.

    விருந்து ஒன்பால் என்பது விருந்து உபசரித்தல் என்று பொருள்.

    ஆன்றோர்களும், சான்றோர்களும் விருந்து உபசரித்தல் செய்து அவர்களிடம் நல்லாசி பெற வேண்டும் என்பதுதான் திருமண தர்மம் கூறுகிறது.

    அதற்கு பிறகு தன் வம்ச விருத்திக்காக பிள்ளை பெறுதல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

    • திருமண மண்டபத்தில் திருமண தம்பதியர் முன்பாக அக்கினி குண்டம் வளர்க்கப்படும்.
    • இந்த அக்கினியை சாட்சியாக வைத்துதான் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.

    இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் சொல்லப்படும் செய்திகளும், ரகசியங்களும் எண்ணில் அடங்கா ஏராளமான நுணுக்கங்கள் உள்ளன.

    திருமண மண்டபத்தில் திருமண தம்பதியர் முன்பாக அக்கினி குண்டம் வளர்க்கப்படும்.

    இந்த அக்கினியை சாட்சியாக வைத்துதான் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.

    அங்கு இருவருமே ஒருவருக்கு ஒருவர் இன்ப துன்பம் கர்மா இவைகளை ஒருவருக்கு ஒருவர் பங்கு ஏற்பதாகவும் உறுதிமொழியுடன் திருமணம் நடக்கிறது.

    வாழ்க்கையில் யாராவது ஒருவர் ஒருவருக்கு துரோகம் செய்தால் அவரை பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த அக்கினி சுடும் என்பதால் தான் அக்கினியை சாட்சியாக வைத்து திருமணம் நடைபெறுகிறது.

    • இருமனம் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்.
    • இந்த திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.

    மாங்கல்யம் (மாங்கல்யத்திற்கு) தாலி என்ற சொல் எப்போது சொல்லப்பட்டது.

    இதை தாலி என்று ஏன் சொல்கிறோம்.

    இருமனம் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்.

    இந்த திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.

    பெண்மகள் கழுத்தில் ஆண் மகன் இரு உறவினர்கள் முன்னிலையிலும் மற்றும் ஊரார் முன்னிலையிலும் கட்டவதுதான் தாலி என்கிறோம்.

    இந்த தாலி தங்கத்தால் ஆன பொட்டுடன் மஞ்சள் சரடுடன் கட்டப்படுகிறது.

    தங்கத்தால் கட்டப்படுவதால் இது தாலி என்று பெயர் பெற்றதா?

    தமிழகத்தில் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏராளமாக சொல்லப்பட்டுள்ளன.

    கருவறை முதல் கடைசி காலம் வரை மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வுகளிலும் சுப நிகழ்ச்சிகளும் வாழ்க்கை வளமுடன் நலமுடன் வாழ்வாதார நிலை மேம்படவும் தர்ம சிந்தனையுடன், தீர்க்க ஆயுளுடனும் வாழ்வதற்கு உருவாக்கி அமைக்கப்பட்டதுதான் சடங்குகளும், சம்பிரதாயங்களும்.

    • அன்று ஒருநாள் மட்டும் கங்கா தேவி நாம் குளிக்கும் நீரில் இருப்பாள்.
    • இதனால் எல்லோரும் எண்ணைய் தோய்த்து கங்கா ஸ்ஞானம் செய்ய வேண்டும்.

    தீபாவளி திருநாள் அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்து எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    அன்று எண்ணைய் தேய்த்து குளித்தால் கங்கையில் குளிப்பதற்கு சமம்.

    அன்று ஒருநாள் மட்டும் கங்கா தேவி நாம் குளிக்கும் நீரில் இருப்பாள்.

    இதனால் எல்லோரும் எண்ணைய் தோய்த்து கங்கா ஸ்ஞானம் செய்ய வேண்டும்.

    எல்லோர் வாழ்விலும் இருள் அகன்று தித்திக்கும் தீப ஒளி வீசட்டும்.

    ஈசன் அருள் பெற்று மனமகிழ்ச்சியோடு வாழுங்கள். மற்றவரையும் மன மகிழ்ச்சியோடு வாழ வையுங்கள்.

    • பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது.
    • இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.

    பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை.

    பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது.

    இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.

    புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூடிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.

    வீடுகளில் மட்டுமின்றி ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.

    பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும். அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை எண்ணெய் போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.

    ×