என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

    வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

    சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்

    சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

    குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

    சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

    சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:

    மாலை கழற்றும் மந்திரம்

    அபூர்வ சாலரோஹ & திவ்ய தரிசன காரினே

    சாஸ்த்ரு ணித்ராத் மகாதேவ

    தேஹமே விரத விமோசனம்

    • மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.
    • மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

    பதினெட்டாம் படியின் வடதிசையில் மஞ்சமாதா கோவில் உள்ளது. சாஸ்தா சந்நிதியில் இருந்து கீழே இறங்காமல் மேம்பாலம் வழியாகவே அம்பாள் கோவிலுக்குச் சென்று விடலாம்.

    திருநடை திறக்கப்படாத சமயங்களில் திரிசூலம் விளக்கு இவைகளை தரிசிக்கலாம்.

    மஞ்சள்பொடி நிறைந்த தட்டில் எரியும் ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக பன்னீரை பக்தர்கள் மீது தெளித்தவாறே மஞ்சள் மாதா தரிசனம் பெறச்செய்வார்கள்.

    மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.

    மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

    அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை.

    அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி எபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.

    • இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
    • இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.

    தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன.

    அவற்றை "அய்யப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.

    சபரிமலை

    இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.

    எருமேலி

    இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.

    ஆரியங்காவு

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.

    இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் அய்யப்பன்.

    அச்சன்கோவில்

    செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது.

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.

    இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன்.

    இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர்.

    இங்குள்ள அய்யப்பன் "கல்யாண சாஸ்தா" என்று அழைக்கிறார்கள்.

    இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    பந்தளம்

    இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார்.

    அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

    குளத்துப்புழா

    செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது.

    இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் "பால சாஸ்தா" என்று அழைக்கப்படுகிறார்.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    • மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்.

    மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு முதலில் 41 நாட்கள் கொண்ட விரதத்தை (கடினமாக தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று ருத்ராக்ஷத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

    அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், பு¬யிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல் மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க வேண்டும்.

    இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும்.

    தற்பொழுது விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், இருந்தாலும் மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு நல்லெண்ணத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர்.

    நூற்றுக்காணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன் எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் காட்டுப் மலைப் பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் கொண் டது) காலணிகள் அணியாமல் நடந்து செல்வதையே இன்னும் விரும்புகின்றனர்.

    ஆனால் புதிய யாத்திரையை மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து மாற்று வழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.

    அதற்கு பிறகு, புனிதயாத்திரை மேற்கொள்ளும் அனைவரும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஏற்றதுடன் கூடிய (நீலிமலை) காட்டு மலைப் பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும்.

    ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ஒற்றை வழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக இன்று காணப்படுகின்றன.

    • ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.

    மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது.

    மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.

    மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது.

    சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்.

    இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை.

    மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.

    இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே.

    • இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான்.
    • அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

    கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது.

    யார் ஒருவர் சபரி மலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு 7 நாட்டு சனி பகவானின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.

    ஏன் என்றால் சனீஸ்வர பகவான் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவர்.

    இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:

    இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான்.

    அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

    உஷா தேவி விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர்.

    தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.

    சூரியன் & உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.

    1. வைவஸ்வத மனு & மகன், 2. யமதர்ம ராஜன் & மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்).

    சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும்.

    "வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்" எனவே உஷா தேவி தன் நிழலை உருவமாக்கி "சாயா தேவி" என்று மாறினாள்.

    "சாயா" என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள்.

    இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள்.

    நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

    1. சாவர்ணி மனு & மகன், 2. ச்ருத கர்மா & மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.

    தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள்.

    இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான்.

    ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட "சாயா தேவி" தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.

    தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள்.

    தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார்.

    சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.

    சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார்.

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார்.

    அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.

    இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத் தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய "ச்ருத கர்மா" தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான்.

    பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.

    அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத் தில் கிரக நிலையினை அருளினார்.

    அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்" என்ற பெயரும் சூட்டினார்.

    வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.

    மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று அய்யப்பன் அருள் செய்தார்.

    இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய அய்யப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.

    எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

    • "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
    • பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போவோம் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.

    பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர்.

    இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

    அய்யப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள்.

    அவர்களின் வழி பின்பற்றி அய்யப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.

    அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும்.

    அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும்.

    கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.

    • ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா
    • ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா

    ஓம் சுவாமியேஸசரணம் ஐயப்பா

    அரிஹரசுதனேசரணம் ஐயப்பா

    அன்னதானப் பிரபுவேசரணம் ஐயப்பா

    அமுதமலை ஏற்றமேசரணம் ஐயப்பா

    அமுதமலை இறக்கமேசரணம் ஐயப்பா

    அன்புள்ளம் கொண்டவனேசரணம் ஐயப்பா

    அமுதா நதியேசரணம் ஐயப்பா

    அலங்காரப் பிரியனேசரணம் ஐயப்பா

    அச்சன் கோவில் அரசேசரணம் ஐயப்பா

    அனாத ரட்சகனேசரணம் ஐயப்பா10

    ஆபத்தபாந்தவரேசரணம் ஐயப்பா

    ஆரியங்காவு ஐயாவேசரணம் ஐயப்பா

    ஆனந்த ரூபனேசரணம் ஐயப்பா

    ஆதிசக்தி மைந்தனேசரணம் ஐயப்பா

    ஆறுமுகன் சோதரனேசரணம் ஐயப்பா

    இச்சை தவிர்ப்பவனேசரணம் ஐயப்பா

    இருமுடிப்பிரியனேசரணம் ஐயப்பா

    இணையில்லா தெய்வமேசரணம் ஐயப்பா

    இன்சுவை பொருளேசரணம் ஐயப்பா20

    இடர்களை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா

    இருளகற்றிய ஜோதிசரணம் ஐயப்பா

    இன்பம் தருபவனேசரணம் ஐயப்பா

    இஷ்டம் வரம் தருபவரேசரணம் ஐயப்பா

    ஈடில்லா தெய்வமேசரணம் ஐயப்பா

    ஈசனின் மைந்தனேசரணம் ஐயப்பா

    ஈன்றெடுத்தே தாயேசரணம் ஐயப்பா

    ஈகை நிறைந்தவனேசரணம் ஐயப்பா

    உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா30

    உத்தமனே சத்தியனேசரணம் ஐயப்பா

    உடும்பறைக் கோட்டையேசரணம் ஐயப்பா

    ஊமைக்கருள் புரிந்தவனேசரணம் ஐயப்பா

    ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    எங்கள் குல தெய்வமேசரணம் ஐயப்பா

    என் குருநாதரேசரணம் ஐயப்பா

    எங்கள் குறை தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    எருமேலி வாசனேசரணம் ஐயப்பா

    எங்களை காத்தருள்வாய்சரணம் ஐயப்பா

    ஏழைப் பங்காளன்சரணம் ஐயப்பா40

    ஏற்றம் மிகுந்தவனேசரணம் ஐயப்பா

    ஏகாந்த மூர்த்தியேசரணம் ஐயப்பா

    ஏத்தமானூர் அப்பனேசரணம் ஐயப்பா

    ஒளிரும் திருவிளக்கேசரணம் ஐயப்பா

    ஓங்காரப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    ஓதும்மறை பொருளேசரணம் ஐயப்பா

    ஔடதம் ஆனவனேசரணம் ஐயப்பா

    கன்னி மூலகணபதி பகவானேசரணம் ஐயப்பா

    கருத்த சுவாமியேசரணம் ஐயப்பா

    கரிமலை ஏற்றமேசரணம் ஐயப்பா50

    கரிமலை இறக்கமேசரணம் ஐயப்பா

    கண்கண்ட தெய்வமேசரணம் ஐயப்பா

    கலியுக வரதனேசரணம் ஐயப்பா

    கல்லிடும் குன்றேசரணம் ஐயப்பா

    கற்பூர ஜோதியேசரணம் ஐயப்பா

    கருப்பண்ண சுவாமியேசரணம் ஐயப்பா

    கருணையின் வடிவேசரணம் ஐயப்பா

    காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா

    காருண்ய மூர்த்தியேசரணம் ஐயப்பா

    காமாட்சியே தாயேசரணம் ஐயப்பா60

    காளைகட்டி நிலையமேசரணம் ஐயப்பா

    குலத்துபுழை பாலகனேசரணம் ஐயப்பா

    குறைகளை நீக்கிடுவாய்சரணம் ஐயப்பா

    குற்றங்களை பொறுத்தருள்வாய்சரணம் ஐயப்பா

    குழந்தை மனம் படைத்தவனேசரணம் ஐயப்பா

    குருவாயூர் அப்பனேசரணம் ஐயப்பா

    குன்றின் மீது அமர்ந்திருப்பவனேசரணம் ஐயப்பா

    கொண்டு போய் கொண்டு வரனும் பகவானேசரணம் ஐயப்பா

    சபரி பீடமேசரணம் ஐயப்பா70

    சரங்குத்தி ஆலேசரணம் ஐயப்பா

    சபரி கிரீஸனேசரணம் ஐயப்பா

    சங்கடங்களை தீர்த்துடுவாய்சரணம் ஐயப்பா

    சத்ரு சம்ஹரனேசரணம் ஐயப்பா

    சரண கோஷப் பிரியனேசரணம் ஐயப்பா

    சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா

    சாந்த சொரூபனேசரணம் ஐயப்பா

    சாந்தி தரும் பேரழகேசரணம் ஐயப்பா

    சிறிய கடுத்தசாமியேசரணம் ஐயப்பா

    சிதம்பரனார் பாலகனேசரணம் ஐயப்பா80

    சுடரும் விளக்கேசரணம் ஐயப்பா

    தர்ம சாஸ்தாவேசரணம் ஐயப்பா

    திருமால் மருகனேசரணம் ஐயப்பா

    தித்திக்கும் தெள்ளமுதேசரணம் ஐயப்பா

    தேனாபிஷோக பிரியரேசரணம் ஐயப்பா

    நாகராஜக்களேசரணம் ஐயப்பா

    நித்திய பிரம்மச்சாரியேசரணம் ஐயப்பா

    நீலமலை ஏற்றமேசரணம் ஐயப்பா

    நீலமலை இறக்கமேசரணம் ஐயப்பா

    நீல லஸ்தர தாரியேசரணம் ஐயப்பா90

    நெய் அபிஷேக பிரியரேசரணம் ஐயப்பா

    பம்பா நதியேசரணம் ஐயப்பா

    பம்பையின் சிசுவேசரணம் ஐயப்பா

    பம்பை விளக்கேசரணம் ஐயப்பா

    பந்தள மாமணியேசரணம் ஐயப்பா

    மமதையெல்லாம் அழிப்பவனேசரணம் ஐயப்பா

    மகர ஜோதியேசரணம் ஐயப்பா

    வாவரின் தோழனேசரணம் ஐயப்பா

    வன்புலி வாகனனேசரணம் ஐயப்பா

    வில்லாளி வீரனேசரணம் ஐயப்பா

    வீரமணி கண்டனேசரணம் ஐயப்பா

    விபூதிப் பிரியனேசரணம் ஐயப்பா

    பொன்னம்பல வாசனேசரணம் ஐயப்பா

    பஞ்சமாதா திருவருளேசரணம் ஐயப்பா

    மாளிகை புரத்தம்மனேசரணம் ஐயப்பா

    தேவிலோக மஞ்சாதவேசரணம் ஐயப்பா

    ஐங்கரன் தம்பியேசரணம் ஐயப்பா

    ஐஸ்வர்யம் தருபவனேசரணம் ஐயப்பா108

    சுவாமியே சரணம் ஐயப்பா!

    • பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
    • சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.

    முதல்படி: விஷாத யோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும்.

    இறைவன் அருளால் முக்தியடைய என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல்படி.

    இரண்டாம்படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.

    மூன்றாம்படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.

    ஐந்தாம்படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

    ஆறாம்படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

    ஏழாம்படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.

    எட்டாம்படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

    ஒன்பதாம்படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.

    பத்தாம்படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.

    பதினொன்றாம்படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.

    பன்னிரண்டாம்படி: பக்தி யோகம். இன்பம் & துன்பம், விருப்பு & வெறுப்பு, ஏழை & பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.

    பதிமூன்றாம்படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.

    பதினான்காம்படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

    பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம்.தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

    பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

    பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.

    பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும். 

    • பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச்செய்ய வேண்டும்.
    • சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்த வேண்டும். கூட்டு பஜனையை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா?

    முதலில் மஞ்சள் பொடி கொண்டு மஞ்சள் பிள்ளையார் ஒன்று செய்து வைத்து வணங்க வேண்டும்.

    குருசாமியும் மற்ற சாமிகளும் விநாயகர் முதற்கொண்டு மற்ற கடவுள்களை மனதில் வணங்கி பின்னர் ஒவ்வொருவராக சரண கோஷம் எழுப்ப வேண்டும்.

    விநாயகர், முருகன், சக்தி, சிவன், விஷ்ணு என்ற வரிசையில் ஆரம்பித்து பிறகு அய்யப்பன் மீது பாடல்கள் பாட வேண்டும்.

    பாடல்கள் பாடி முடித்ததும் தேங்காய் உடைத்து நீர் தெளித்து தீபம் காட்ட வேண்டும்.

    பிறகு 18 படிகள் இருந்தால் அதிலோ அல்லது வாழை இலையின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு 9 வீதம் வாழைப்பழத்துண்டுகளை நறுக்கி வைத்து அதில் கற்பூரத்தை வைத்து படிப்பாட்டு பாட தொடங்க வேண்டும்.

    படிப்பாட்டு முடிந்தவுடன் படிகளில் உள்ள கற்பூரத்தை ஏற்றி படி பூஜை செய்ய வேண்டும்.

    பிறகு மங்களம் சொல்லி அனைவரும் கற்பூர தீபத்தை கண்களில் ஒற்றிக்கொள்ள இப்பூஜை இனிதே முடியும்.

    பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச்செய்ய வேண்டும்.

    சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.

    • வானத்தில் நட்சத்திரம் ஒன்றும் பிரகாசிக்கிறது.
    • அப்போது வெகுதூரத்தில் காணப்படும் பொன்னம்பலமேட்டில் முளைத்து நிற்கும் மாமரங்களுக்கு மத்தியில் சின்னஞ்சிறிய தீபம் தோன்றுகிறது.

    தனது தந்தை சிவனைப் போல அய்யப்பனும் ஜோதி வடிவில் காட்சிதந்து பரவசமடைய வைக்கிறார். இந்நிகழ்ச்சி மகரஜோதி என்று அழைக்கப்படுகிறது.

    கடும்விரதம் இருந்து தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, சுவாமி அய்யப்பன் மகர சங்கராந்தியான தை மாதம் 1&ந் தேதி சபரிமலையின் வடகிழக்கில் உள்ள காந்தமலை என்று அழைக்கப்படும் பொன்னம் என்பது மலை.

    மகரஜோதி தரிசனத்தன்று அய்யப்பனுக்குச் சூட்டப்படும் ஆபரணங்கள் பந்தளத்து அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆபரணங்கள் வேலைப்பாடமைந்த புராதனமான 3 பெட்டிகளில் உள்ளது. சபரிமலை எங்கும் சுவாமியே சரணம் அய்யப்பா என்னும் தாரக மந்திரம் ஒலிக்கிறது.

    சரியாக மாலை 6.45 மணிக்கு அய்யப்பன் கோவிலில் மாலை நேர தீபாராதனைக்குரிய மணி அடிக்கப்படுகிறது.

    அதைக் கேட்டதும் அய்யப்ப பக்தர்களின் சரணகோஷம் அண்டத்தையே கிடுகிடுக்க வைக்கிறது.

    வானத்தில் நட்சத்திரம் ஒன்றும் பிரகாசிக்கிறது.

    அப்போது வெகுதூரத்தில் காணப்படும் பொன்னம்பலமேட்டில் முளைத்து நிற்கும் மாமரங்களுக்கு மத்தியில் சின்னஞ்சிறிய தீபம் தோன்றுகிறது.

    அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிறது. சிறிதாகியது. பின் தாழ்ந்து போகிறது.

    இப்படி 3 முறை அந்த ஜோதி தெள்ளத்தெளிவாக பக்தர்கள் அனைவரது கண்களுக்கும் காட்சி அளிக்கிறது.

    சுமார் 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் வரை ஜோதியாக பொன்னம்பல மேட்டில் ஐய்யன் காட்சி தருகிறார்.

    • பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஹனுமார் கோவிலிலும் வழிபடவேண்டும்.
    • நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்டபிறகே செல்ல வேண்டும்.

    எருமேலி:

    தர்மசாஸ்தா சன்னதி (எருமேலி) அய்யப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசேகரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது.

    பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின்போது சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் என்று பாடவேண்டும் காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.

    பாம்பா நதி வழிபாடு:

    பம்பை நதியில் பக்தியுடன் அய்யப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், குருதட்சணை, அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும்.

    காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகின்றன.

    பம்பை ஸ்ரீராமர் அனுமர் கோவில் வழிபாடு:

    பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஹனுமார் கோவிலிலும் வழிபடவேண்டும்.

    பந்தள ராஜவந்தனம்:

    நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்டபிறகே செல்ல வேண்டும்.

    அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி:

    அய்யப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமாக கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

    கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி இந்த இடத்தில் அரிசிமாவு உருண்டையும் வெல்ல உருண்டைகளையும் இந்தக்குழியில் போட வேண்டும்.

    சரஸ்குழி ஆல்துறை:

    கன்னிசுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.

    நெய் அபிஷேகம்:

    நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

    கணபதி சுவாமி சன்னதி:

    இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய், தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.

    சண்முக சுவாமி சன்னதி:

    இதுவும் மகா கணபதி சன்னிதானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் முதலியவற்றை ஏற்றி வழிபட வேண்டும்.

    மாளிகைப்புறத்தம்மா அய்யப்ப சக்தி ஸ்வரூபிணி தேங்காய் உருட்டல் அந்த அம்மனுக்குரிய முக்கியமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு முதலியவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவும்.

    கருத்த சுவாமிகள்:

    அவல், நெல்பொறி, வெல் லம், பழம், தேங் காய், வறுத்தபொடி முதலி யவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    கருப்ப சுவாமிகள்:

    இங்கு கற்கண்டு திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.

    நாகராஜா, நாகஷியம்:

    இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் ஸர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க ஸ்ர்ப்ப பாட்டு பாட வேண்டும்.

    வாபர் சுவாமி:

    இந்த சன்னதியில் வாசனை திரவியங்களாக பன்னீர், ஊதுபத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும்.

    ×