என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது.
- பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.
நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும்.
அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.
பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன.
குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.
ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது.
அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.
பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை.
இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.
- நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.
- கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.
முதலில் பசுவை அழைத்து வர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும்.
பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும். பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.
நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.
கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.
108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்.
பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.
இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.
வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.
பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.
- பசுவுக்கு பூஜை செய்வது பரராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
- கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்த ஜாதி, மதம் மொழியும் தடையாக இல்லை.
பசு மாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.
வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்
பசு உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
எனவே கோமாதா பூஜை செய்யும் போது, முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.
பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும்.
எனவேதான் அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.
பசுவுக்கு பூஜை செய்வது பரராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்த ஜாதி, மதம் மொழியும் தடையாக இல்லை.
உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.
கோ பூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியல் செய்த பாவங்கள் விலகும்.
நீண்ட கால மனக்குறைகள் விலகும். கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும், நம்பிக்கையும் முக்கியமாகும்.
- பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே.
- மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.
இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன.
அத்தகைய காரணங்களில் முதன்மையாக இருப்பவைகளில் தனிச்சிறப்புடன் திகழ்வது பசுக்கள்.
இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது.
பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள்.
அதற்கு பதில் பசுவை, பசுத்தாய், கோமாதா என்றே அழைப்பார்கள்.
பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே.
மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.
எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது.
எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் பசுத்தொழுவம் அமைத்து அன்றாடம் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.
தினமும் பசு மடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை.
அதோடு முக்கிய நாட்களில் அல்லது எல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம்.
- ‘கருடக் கிழக்கு’ என்ற ஒரு கிழங்கை வீட்டு வாசலுக்கு முன் கட்டுவதுண்டு.
- இப்படி செய்தால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வராது. இந்தக் கிழங்கு நீண்ட வேர் உள்ள பீட்ரூட் கிழங்கு போன்றிருக்கும்.
"என்னை வழிபடுதல், ஆடம்பரம் இல்லாமல் இருத்தல், என் கதைகளைக் கேட்டல், என்னை நினைத்து உருகுதல், எந்தப் பயனையும் எதிர்பாராதிருத்தல் இத்தகைய உயரிய பண்புகள் எவரிடம் உள்ளதோ, அவர்களே உண்மையான பக்தர்கள்.
அவர்களே சிரேஷ்டர்கள், தவசிகள், வித்வான்கள், அப்படிப்பட்டவர்களுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம். அவர்களிடமிருந்து ஞானத்தையும் பெறலாம்.
அவர்கள் என்னைப் போல ஆராதனைக்கு உரியவர்கள்" என்று ஸ்ரீ கருடன் கூறியதாக 'காருடம்' என்னும் நூல் தெரிவிக்கிறது.
ஹர்ஷனால் எழுதப்பட்ட 'நாகா நந்தம்' என்ற நாடக நூலின் 4, 5 அத்தியாயங்களில் இரண்டு செய்யுள்களில் கருடனின் சக்தி, கருடனின் கருணை பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.
கருட புராணம் "சகல விதமான தர்ம சாஸ்திரங்கள், நீதிகள், பிரேத கல்பம், வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், சாமுத்ரிகா லட்சணம், ரன பரீட்சை முதலியவற்றைப் பற்றி கருடன் உபதேசிக்கிறார்" என்று குறிப்பிடுகிறது.
"மகா விஷ சர்ப்பங்களை அடக்கி வைப்பவர் கருடன்" என்று காளிதாசன் ரகு வம்சத்தில் கூறியுள்ளார்.
கழுகரசன் வானத்தில் ஒரு யானையையும், ஓர் ஆமையையும் தன் இரண்டு கரங்களால் பிடித்துக் கொண்டும், மூக்கினால் ஒரு கரத்தை எடுத்துக் கொண்டும் ஆவேசமாகப் பறக்கிறார்.
மரத்தில் ரிஷிகள் தொங்குகிறார்கள்.
கருட பகவானின் வீரத்தை நன்கு காட்டும் இந்த ஒரு செயலுக்காகவே 'கருடன்' என்று இந்திரன் பெயரிட்டதாகப் புராண வாயிலாக அறிகிறோம்.
'கருடக் கிழக்கு' என்ற ஒரு கிழங்கை வீட்டு வாசலுக்கு முன் கட்டுவதுண்டு.
இப்படி செய்தால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வராது. இந்தக் கிழங்கு நீண்ட வேர் உள்ள பீட்ரூட் கிழங்கு போன்றிருக்கும்.
சிசுபாலனின் சண்டையில் கிருஷ்ணனின் போர்ப் பாசறையின் மீது வெற்றி தரும் கருடத்வஜம் (கருடக் கொடி) பறந்தது.
கிருஷ்ண பகவானுக்கும் கருடத்வஜம் உண்டு என்று புராணங்கள் மூலம் அறிகிறோம்.
பெண்கள் ஆவணி மாதம் வரும் பஞ்சமியில் கருடனுக்கு நோன்பு செய்வார்கள்.
அன்று கருடனின் அவதார நாள். இந்த நோன்பை 'கருட பஞ்சமி' என்று அழைப்பார்கள்.
ஸ்ரீரங்கம், திருநறையூர், நாச்சியார் கோவில் ஆகிய தலங்களிலுள்ள கருட பகவானை வணங்குவதை வைணவர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
ஓம் தத்புருச்ஷாய வித்மஹே
சுவர்ண பக்சாய தீமஹி
தந்நோ கருட பிரசோதயாத்
சிறப்பான கருட மந்திரம்
ஓம் நமோ பகவதே கருடாய காலாக்னி வர்ணாய
ஏஹி ஏஹி காலாநல, லோல ஜிஹ்வாய
பாதய பாதய, மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய பிரமபிரம, பிரமய பிரமய
ஹந ஹந, தஹ தஹ, பதபத ஹ¨ம்பட் ஸ்வாஹா.
கருட பஞ்சாட்சரி
ஓம் ஷிப ஸ்வாஹா
ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.
- வேதாந்த தேசிகர் ‘கருட பஞ்சாசத்’ என்ற நூலை திருவகிந்திரபுரத்தில் இயற்றினார்.
- இதற்குச் சான்றாக அங்கு கருட பகவானால் நிர்மானிக்கப்பட்ட ‘கருட நதி’ ஓடுகிறது.
வேதாந்த தேசிகர் 'கருட பஞ்சாசத்' என்ற நூலை திருவகிந்திரபுரத்தில் இயற்றினார்.
இதற்குச் சான்றாக அங்கு கருட பகவானால் நிர்மானிக்கப்பட்ட 'கருட நதி' ஓடுகிறது.
ஆதிசங்கரர் இயற்றிய நூல்களில் சவுந்தர்ய லஹரி' என்பது ஒன்று.
மந்திர சாஸ்திரமாகக் கருதப்படும் இந்த நூலின் 20 வது பாடலில் கருடனைப் பற்றிய செய்தி வருகிறது.
அது வருமாறு:
"தேவியை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி தியானம் செய்கிறானோ, அவன் பட்சி ராஜனாகிய கருடனைப் போல் பாம்புகளின் விஷத்தை அடக்குகிறான். ஜூரத்தால் பீடிக்கப்பட்டவர்களைப் பீடை நீங்கிச் சுகமடையச் செய்கிறான்".
தொண்டரடிப் பொடியாழ்வார் தமது 'திருமாலை' என்ற பாசுரங்களில் 10வது பாடலில் கருடனைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்.
"கேட்டிரே நம்மீர்காள்!
கருட வாகனனும் நிற்க!
சேட்டை தன் மடிய கத்துச்
செல்வம் பார்த்திருக்கின்றீரே!"
பொருள்: கருடனை வாகனடாகக் கொண்டுள்ள மலர் மகள் மணவாளன் இருக்கும் போது, பிற தேவதைகளைப் பற்றுவது மூதேவியிடம் செல்வத்தை வேண்டுவது போலாகும்.
- கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது.
- மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும்.
கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது.
மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும்.
கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு
"குங்குமங்கித வர்ணாய
குந்தேற்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்
பட்சிராஜாயதே நமஹ"
- இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது.
- இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.
பெருமாள் கருடனுக்கு அபயம் அளித்த தலம் "திருச்சிறு புலியூர்" என்ற தலமாகும்.
இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது.
இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.
"கருடா சவுக்கியமா" என்று பாம்பு கேட்டதற்கு "அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே" என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது.
இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில்தான்.
கருடாழ்வாரை வணங்கும் துதி
பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்நர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்ஷ்யாய அமித தேஜயே
- அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார்.
- அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார்.
ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.
காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன.
இதில் எது சுயம்புலிங்கம் என்று கண்டுபிடிக்க முடியாமல் அனுமான் சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார்.
அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார்.
இதனால்தான் காசியில் எல்லைக் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவர் கருடனையும், பல்லியையும் சபித்து விட்டார்.
இதிலிருந்து காசியில்கருடன் பறப்பதில்லை, பல்லி ஒலிப்பதில்லை.
- ஆனால் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு மட்டும் அவ்வளவாகக் கொண்டாடுவதாக தெரியவில்லை.
- எனவே இனியேனும் கருட வழிபாட்டை பக்த கோடிகள் கடைப்பிடித்து கருடாழ்வாரின் அருளாசியை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார்.
மற்ற தெய்வங்களின் சிறப்பு வழிபாடு போல கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடை பிடித்து ஸ்ரீ கருடபகவானின் அருளாசிக்குப் பாத்திரமாக வேண்டும்.
பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி அம்பாள் பூஜை, அமாவாசை அனுமன் வழிபாடு, விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு, அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு, சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு, சஷ்டியில் முருக வழிபாடு, ஏகாதசியில் விஷ்ணு வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம்.
இது போல இன்னும் ஏராளம், ஏராளமான தெய்வ வழிபாடுகள் கொண்டாடப்படுகின்றன.
ஆனால் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு மட்டும் அவ்வளவாகக் கொண்டாடுவதாக தெரியவில்லை.
எனவே இனியேனும் கருட வழிபாட்டை பக்த கோடிகள் கடைப்பிடித்து கருடாழ்வாரின் அருளாசியை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஸ்ரீ கருட வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் அவரின் திதி, நட்சத்திரத்தில் கொண்டாடலாம்.
மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.
மேலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் கருட வழிபாட்டை செய்து அவரின் அருளாசியால் சகல நன்மைகளையும் பெறலாம்.
கருட பகவானுக்கு பிடித்தமான அபிஷேக ஆராதனைகள், பலகார பட்சணங்கள் போன்றவற்றைச் சிறப்பாக சமர்பித்து அவரது அருளைப் பெறலாம்.
- தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.
- எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.
மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி
வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.
பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.
அதுவும் தூயவர்களை அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள்.
அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.
அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.
பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள்.
எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.
பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.






