என் மலர்
புதுச்சேரி

காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தலைவர்கள் விநாயகம், வீரமுத்து தலைமை வகித்தனர்.
புதுச்சேரி:
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மீது மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மங்களம் தொகுதி உறுவையாறில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் விநாயகம், வீரமுத்து தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் திருமுருகன், மருதுபாண்டியன், செல்வராஜ், ஜானு அம்மாள், காளிமுத்து, லோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story






