என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நலத்திட்ட பணிகள்-செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    X

    நலத்திட்ட பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் காட்சி படம்.

    நலத்திட்ட பணிகள்-செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    • ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 291, பாகூர் திரவுபதியம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 739 ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் பழைய நீர்தேக்க தொட்டி அருகே கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 291, பாகூர் திரவுபதியம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 739 ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×