search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
    X

     விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம். 

    விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா

    • 14-வது பட்டமளிப்பு விழா, பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜன் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கிருமாம்பாக்கம் விநாயக மிஷன் செவிலியர் கல்லூரி 14-வது பட்டமளிப்பு விழா, பேச்சு, செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் கவுரவ விருந்தினராக விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

    சென்னை உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் காஞ்சனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் 55 பேருக்கும் முதுகலை மாணவர்கள் 18 பேருக்கும், போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் 17 பேருக்கும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இளங்கலை படித்த 25 பேருக்கும் பட்டம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுகள் மற்றும் மருத்துவ வாழ்வியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜன் வரவேற்றார்.

    விநாயக மிஷன் புதுச்சேரி வளாகத்தில் நிர்வாக தலைமை அதிகாரி டாக்டர் கோட்டூர், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் ராகேஷ் செகல், இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் கோரகுருவில்லா, மருத்துவக் கல்வி பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி, இணை பதிவாளர் பெருமாள் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா ரமேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×