என் மலர்
புதுச்சேரி

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படங்களுக்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் மலரஞ்சலி ெசலுத்திய காட்சி.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி
புதுச்சேரி:
கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சமூதாய மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் பலியானர்கள்.இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் புதுவை பா.ம.க. சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை முழுவதும் நடந்தது.
நெட்டப்பாக்கம் தொகுதி எம்.ஆர்.எப். பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் எம்.ஆர்.எப். தொழிற்சாலை நுழைவாயில் முன்பு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பா.ம.க. மாநில அமைப்பாளர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் புருஷோத்தமன் தொகுதி தலைவர் குரு, தொகுதி செயலாளர் சிவா, எம்.ஆர்.எப். தொழிற்சங்க தலைவர் விஜயன், பண்டரிநாதன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






