என் மலர்
புதுச்சேரி

ஆத்மா திட்டம் மற்றும் பண்ணைப்பள்ளியின் அவசியம் குறித்து பேசிய காட்சி.
விவசாயிகளுக்கு பயிற்சி
- ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மதகடிப்பட்டுபாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளியின் 4-ம் வகுப்பு நடைபெற்றது.
- சாப்ஸ் ஆர்கானிக்ஸ் லிருந்து வருகை புரிந்த லட்சுமி நாராயணன் சோலார் விளக்குப் பொறியின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி செயல்விளக்கமளித்தார்.
புதுச்சேரி:
விவசாயிகளுக்கு அனுபவ விவசாயிகளே பயிற்சியளிக்கும் பண்ணைப்பள்ளி புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மதகடிப்பட்டுபாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளியின் 4-ம் வகுப்பு நடைபெற்றது.
இதில் வேளாண் அலுவலர் நடராஜன் ஆத்மா திட்டம் மற்றும் பண்ணைப்பள்ளியின் அவசியம் குறித்து பேசினார்.
சிறப்பு அழைப்பளர்களாக பங்கேற்ற மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரியிலிருந்து வருகை புரிந்த உதவிப் பேராசிரியர் சுந்தரம் காய்கறி பயிர்களில் பயன்படுத்தப்பட வேண்டிய பல்வேறு அங்க இடுபொருட்களை தயாரிக்கும் முறைகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார். சாப்ஸ் ஆர்கானிக்ஸ் லிருந்து வருகை புரிந்த லட்சுமி நாராயணன் சோலார் விளக்குப் பொறியின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி செயல்விளக்கமளித்தார்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் விஜயகுமார்சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.






