search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாமானியனின் வாழ்க்கையை மேம்படுத்த ஜி.எஸ்.டி. பெரும் பங்கு வகிக்கிறது
    X

    கோப்பு படம்.

    சாமானியனின் வாழ்க்கையை மேம்படுத்த ஜி.எஸ்.டி. பெரும் பங்கு வகிக்கிறது

    • கவர்னர் தமிழிசை பேச்சு
    • சாமானியர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு பலன் தருகிறது.

    புதுச்சேரி:

    ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் சார்பில் 6-வது ஜி.எஸ்.டி. தின விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அமைக்சர் லட்சுமி நாராயணன், ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தலைமை ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி வசூலின் சராசரி மத்திய அரசை விட புதுவையில் அதிகமாகவே இருக்கிறது. தலைமை ஆணையர் பத்மஸ்ரீ கடந்த வருடத்தை விட ரூ.100 கோடி அதிகமாகவே வரி பெற்று தந்திருக்கிறார். ஜி.எஸ்.டி. முதலில் அமல்படுத்திய போது பிரச்சினைக்குரியதாக பார்க்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. தொடங்கிய போது கடுமையானதாக பார்க்கபட்டாலும் 6 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.

    சாதாரண குடும்பங்களுக்கு ஜி.எஸ்.டி. மிகவும் உதவிகரமாக இருக்கிறது. சாமானியர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு பலன் தருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியானது மக்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருப்பதாய் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டு வரும் முறையாகும்.

    சரியான நேரத்தில் பிரதமர் மோடி பொருளாதார வல்லுனர்களுடன் இணைந்து ஜி.எஸ்.டி. யை இந்தியாவிற்கு கொண்டு வந்தார்.

    ஜி.எஸ்.டி. மிகப்பெரிய பொருளாதார புரட்சி.எல்லோருக்கும் இது பலன் தந்து கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. யானது மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தரும் வகையில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

    சாமானியனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் அனைத்து மாநிலங்களும் முன்னேற்ற மடையவும் ஜி.எஸ்.டி. மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

    Next Story
    ×