search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பட்ஜெட்டில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை-  கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    பட்ஜெட்டில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை- கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    • புதுவையில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதல்-அமைச்சர் ரங்கசாமி தான்.
    • ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்ற செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    பட்ஜெட் மீதான விவாதத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவையில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதல்-அமைச்சர் ரங்கசாமி தான். அந்த சாதனையை இனிமேல் யாரும் சமன் செய்ய முடியுமா? என்பது கேள்விக் குறிதான். அதற்காக எனது பாராட்டுக்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்ற செயல்படுகிறார். மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. அவரது நோக்கம் மிகப் பெரியது. அதற்கு தகுந்தார்போல் அவருடைய கூட்டணி கட்சி இல்லை. சபாநாயகரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்கிறார்கள்.

    ஆனால் முதல்-அமைச்சரின் கோரிக்கையான ரூ.2000 கோடி கூடுதல் தொகை, அமைச்சர் லட்சுமி நாராயணன் கேட்ட இழப்பீடு தொகை ஆகியவற்றை வாங்கி கொடுத்து, முதல்-அமைச்சருக்கு உதவிகரமாக இருக்கலாம். ஆனால் இருவரும் மாநிலத்தை கைவிட்டு விட்டார்கள்.

    ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.73,562 கடன் சுமை ஏற்றி இருக்கீறீர்கள். வரியில்லா பட்ஜெட் என்று சொல்லி மின்சார வரி, வீட்டு வரி, சொத்து வரி என பல்வேறு வரிகளைப் போட உள்ளதற்கு முன்னோட்டமா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். பட்ஜெட்டில் வெறும் 7.37 சதவீதம் நிதி மட்டுமே மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது மத்திய அரசின் ஓரவஞ்சனை.

    10 அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் போடாமல் இருப்பது நியாயமா? தாக்கல் செய்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

    இது வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. இதில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. புதுவையில் கவிஞர் பாரதிதாசனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் பெரிய அளவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×