search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 3 அதிகார மையங்கள் செயல்படுகிறது
    X

    கோப்பு படம்.

    புதுவையில் 3 அதிகார மையங்கள் செயல்படுகிறது

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமை செயலர் என 3 அதிகார மையங்கள் தனித்தனியே செயல்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பா.ஜனதா கூட்டணி ஆட்சி உச்சகட்ட அதிகார மோதலில் சிக்கி தவிக்கிறது. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் நடைபெறும் விழாக்கள் குறித்து கவர்னருக்கு தெரி விக்க வேண்டும். அவரை அழைக்காமல் விழா நடத்தக்கூடாது என தலைமை செயலர் அனைத்து துறைக்கும் சுற்ற றிக்கை அனுப்பி யுள்ளார்.

    மக்களால் தேந்தெடுக்கப் பட்ட அரசின் செயல்பாடை முடக்கும் விதத்தில் கவர்னருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

    இது முதல்- அமைச்ச ருக்கு அவ மரியாதையை ஏற்படுத்துகிறது. தனக்கு தெரியாமல் தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பியதாக கவர்னர் கூறியுள்ளார்.

    எனவே தலைமை செயலர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும். புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமை செயலர் என 3 அதிகார மையங்கள் தனித்தனியே செயல்படுகிறது.

    இதனால் அரசு துறை அதிகாரிகள் செயல்பட முடியாமல் அல்லல்படு கின்றனர். கவர்னரும், முதல்- அமைச்சரும் பேச்சு வார்த்தை மூலம் அரசை வழிநடத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி யுள்ளது.

    இதை புதுவையில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இலவச அரிசி வழங்கப்படும் என தெரி வித்தது. தற்போது கவர்னர் அரிசிக்கு பதில் பணம் வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறுகிறார்.

    புதுவை மக்களிடம் கவர்னர் மாளிகை எப்போது கருத்து கேட்பு நடத்தியது? கவர்னர் தெரிவிக்கும் அறிவுரைகள், கருத்துக்களை முதலில் அவர் பின்பற்றி நடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×