என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
காவலாளி மயங்கி விழுந்து சாவு
- வில்லியனூர் அருகே கழிவறையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
- படுக்கை அறையில் சுப்பிரமணியன் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கழிவறையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
வில்லியனூர் அருகே கோர்க்காடு ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது54). இவருக்கு மோகன வள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் இவருக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் இருந்து வந்தது.
இதனால் கடந்த சில மாதங்களாக சுப்பிரமணி யன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் சுப்பிரமணியன் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். படுக்கை அறையில் சுப்பிரமணியன் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கழிவறையில் சுப்பிரமணியன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே காரில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மூத்த மகன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






