search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெளிநாட்டில் இருந்து கூலிப்படை ஏவி ரவுடியை தீர்த்துக்கட்டிய வாலிபர்
    X

    கோப்பு படம்.

    வெளிநாட்டில் இருந்து கூலிப்படை ஏவி ரவுடியை தீர்த்துக்கட்டிய வாலிபர்

    • திடுக்கிடும் தகவல்கள்
    • எதிர்தரப்பால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஊருக்குள் வராமல், மடுகரையில் உள்ள நண்பர் ராம்ஜி வீட் டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலைநகரை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடி தடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிரபல ரவுடியான முத்தி யால்பேட்டை

    அன்புரஜினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று இவர், சில மாதங் களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

    இவர் எதிர்தரப்பால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஊருக்குள் வராமல், மடுகரையில் உள்ள நண்பர் ராம்ஜி வீட் டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.மணிமாறனின் பிறந்தநாளான மடுகரை காலனி பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்.

    அப்போது, அவரை நோட்டமிட்டு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிமாறனை வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து திருபுவனை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப் பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை நேற்று முன்தினம் இரவும், ஒருவரை நேற்றும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நெட் டப்பாக்கம் சூரமங்கலம் மேட்டுத்தெருவை சேர்ந்த சிவராஜ் (22), சூரமங்கலம் பேட் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்த வினோ தன் (29), டி.நகர் ஜீவா னந்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தர்மதுரை (22), வாணரப் பேட்டை கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த விஸ்டம், ரெயின்போ நகரை சேர்ந்த சங்கர் (28) என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட தில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    லாஸ்பேட்டை ரவுடி சோழன் தலை மையிலான கும்பல்தான் கடந்த 2019-ம் ஆண்டு அன்புரஜினியை கொலை செய்ததும், அவரது தம்பி ஜெரிக்கோ கொலையில் தொடர்புடையவர்களை பழிதீர்க்க முடிவு செய்து அன்புரஜினி கொலையில் தொடர்புடைய ஜெரோம் பிரபுவை கடந்த 2021-ம் ஆண்டு சென்னை நீலாங்க ரையில் கொலை செய்தும் கடந்த மே மாதம் அனிச் சக்குப்பத்தை சேர்ந்த விமல் (35) என்பவரை ஆரோவில் பொம்மையார் பாளையம் சாலையில் வெட்டி கொலை செய் தததும், தொடர்ச்சியாக, தற்போது மணிமாறனை கொலை செய்ததும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் பிரான்சில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மர் ஷல் என்பவர் அன்புரஜி னியின் தீவிர ஆதரவாளர் என்பதும் தற்போது அவருடன்தான் அன்புரஜினியின் தம்பி ஜெரிக்கோ வசித்து வருவதும் பிரான்சில் இருந்து கொண்டு அன்புரஜினி கொலையில் தொடர்பு டையவர்களை ஒவ்வொ ருவராக கொல்ல மர்ஷல் தான் நிதியுதவி அளித்து வந்துள்ளார்.

    அவர் கொடுத்த நிதியுதவி மூலம் மணிமாறன் உட்பட 3 பேரையும் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீ சார் இந்த கொலை வழக்கில் ஜெரிக்கோ, மர்ஷல் ஆகியோரையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ள னர். மேலும், பிரான்சில் இருந்து இருவரையும் புதுவை அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×