என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
    X

    கோப்பு படம்.

    பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

    • மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அங்கு கத்தியுடன் நின்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    மூலக்குளத்தில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரில் ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற பாம் மணி(வயது34) என்பதும், ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×