search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவர் உரிமைகளை பாதுகாத்து நாட்டிற்கே  முன்மாதிரியாக புதுவை அரசு திகழ்கிறது
    X

    குஜராத் விஞ்ஞான மையத்தில் நடந்த உலக மீனவர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    மீனவர் உரிமைகளை பாதுகாத்து நாட்டிற்கே முன்மாதிரியாக புதுவை அரசு திகழ்கிறது

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் பெருமிதம்
    • உலக மீனவர் தின வாழ்த்து

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள உலக மீனவர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வாழ் மீனவ சகோதார, சகோதரிகள் அனைவருக்கும் எனது சார்பிலும், புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மக்கள் முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மீனவ சமுதாயத்திற்கு நலத்திட்ட உதவிகள் வந்து சேர்வதை அனைவரும் அறிவர். ஓய்வூதியத்தொகை உயர்த்தப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம், டீசல் மானியம் உயர்வு, தடைக்கால மழைக்கால நிதி யுதவிகள் காலம்தாழ்த்தாமல் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டத்தின் கீழ் காலாப்பட்டு, நல்லவாடு, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக விரிவாக்கம் என ரூ.100 கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டு டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யும் நிலையில் உள்ளது.

    டிசம்பர் இறுதிக்குள் உள்கட்டமைப்பு வசதிகக்கான வேலைகள் தொடங்கப்படும். தூண்டில் முள் வளைவு அமைக்கும் திட்ட அறிக்கையும் இறுதிவடிவம் பெற்றுள்ளது.

    விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. காலாப்பட்டு கடற்கரையோர கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க கடற்கரைகளில் கல் கொட்டும் பணி ரூ.18 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.6 கோடி வேலை நடந்து வருகிறது.

    மீனவ சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் நாட்டில் முன் மாதிரியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த நல்லாட்சியில் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் சமூக நீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர அனை வருக்கும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×