search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியாருக்கு தாரைவார்க்காமல் துறைமுகத்தை அரசே நிர்வகிக்க வேண்டும்-ஜான்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    தனியாருக்கு தாரைவார்க்காமல் துறைமுகத்தை அரசே நிர்வகிக்க வேண்டும்-ஜான்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசே நிர்வகிக்கலாம். இதனால் புதுவைக்கு பலமடங்கு நிதி கிடைக்கும்.
    • அரசு மருத்து வமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசியதாவது:-

    துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசே நிர்வகிக்கலாம். இதனால் புதுவைக்கு பலமடங்கு நிதி கிடைக்கும். இதற்காக சிறந்த வல்லுனர்களை பணியமர்த்த வேண்டும். புதுவைக்கு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் கோப்புகளை தேக்கி வைக்க கூடாது.

    அரசு மருத்து வமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுகிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும்.

    பிளாஸ்டிக்பாட்டில்களை மறு சுழற்சி செய்து ஆடைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை புதுவையில் வந்து தொழில் தொடங்க அழைக்க வேண்டும். அரசுக்கு வருமானம் வரும்போது நாம் தனி மாநில அந்தஸ்து கேட்கலாம்.

    இவ்வாறு ஜான்குமார் பேசினார்.

    Next Story
    ×