search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீன் மார்க்கெட்டை சரிசெய்ய வேண்டும்  கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    மீன் வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மீன் மார்க்கெட்டை சரி செய்து தருமாறு வலியுறுத்திய காட்சி.

    மீன் மார்க்கெட்டை சரிசெய்ய வேண்டும் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்னகடை மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
    • இங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்தும், மின்சார பலகை பாதுகாப்பாக இல்லாமலும் உள்ளது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்னகடை மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்தும், மின்சார பலகை பாதுகாப்பாக இல்லாமலும் உள்ளது.

    இதனால் மீன் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து இப்பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை மீன் வியாபாரிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இதையடுத்து சின்னக்கடை மீன் வியாபாரிகளை அனிபால் கென்னடி அழைத்து சென்று புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார். செயற்பொறியாளர் சிவபாலன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது சின்னக்கடை மீன் மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் முழுமையாக புதுப்பித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறவிட்டதால், நகராட்சி தான் இதை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆணையர் மற்றும் செயற்பொறியாளரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    அதற்கு நகராட்சியில் போதுமான நிதி இல்லாததால் இதை செய்து கொடுக்க காலதாமதம் ஆகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், சட்டமன்ற நிதியின் கீழ் இதை செய்து கொடுங்கள் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த முயற்சிக்கு ஆவண செய்யலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரண் துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர் அஷ்ரப், காந்தி, கணேசன், நிசார், பீட்டர், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×