என் மலர்

  புதுச்சேரி

  ஊழியர் மயங்கி விழுந்து சாவு
  X

  கோப்பு படம்.

  ஊழியர் மயங்கி விழுந்து சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
  • உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

  புதுச்சேரி:

  திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

  திருபுவனை அருகே கொத்தபுரி நந்தம் சொசைட்டி வீதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது57). இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அரிகிருஷ்ணன் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து கடந்த 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அரிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

  இந்தநிலையில் வீட்டில் இருந்த அரிகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  திடீர் மாரடைப்பால் அரிகிருஷ்ணன் இறந்ததாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து அவரது மகன் சரவணசாமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×