search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல்கலைக்கழக காவலாளியை கடித்து குதறிய நாய்
    X

    முருகசாமியின் இடது கையில் நாய் கடித்து ரத்தம் கொட்டிய காட்சி.

    பல்கலைக்கழக காவலாளியை கடித்து குதறிய நாய்

    • சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
    • பல்கலைக் கழகத்தின் உள்ளே உள்ள சாலையில் வந்து கொண்டி ருந்த அவரை வழிமறித்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்து விடாமல் குரைத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வெறி நாய் மற்றும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலியார்பேட்டை, மூலக்குளம், அண்ணா சாலை பகுதிகளில் 30-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் விரட்டி சென்று கடித்தன. இதைய டுத்து புதுவை நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரிந்த 38 நாய்களை பிடித்தனர்.

    இந்தநிலையில் சின்ன காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 50). இவர் புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலை க்கழகத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்தார். பல்கலைக் கழகத்தின் உள்ளே உள்ள சாலையில் வந்து கொண்டி ருந்த அவரை வழிமறித்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்து விடாமல் குரைத்தது.

    ஒரு கட்டத்தில் நாயை சமாளிக்க முடியாத முருகசாமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய போது அந்த நாய் அவரை விடாமல் விரட்டியது. ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடிய அவரை துரத்திச் சென்று நாய் கடித்து குதறியது. கீழே விழுந்த முருகசாமியை நாய் விடாமல் கடித்ததில் இடது கால், இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அங்கு பணியில் இருந்த சக காவலாளிகள் அவரை மீட்டு காலாப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்ததில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட வரும் முருகசாமியின் வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருவ தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு கல்லூரி பேராசிரியர் தங்கதுரை(50)யை நாய் கடித்தது குறிப்பிடத் ததக்கது.

    Next Story
    ×