search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • இந்தியைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்ற திணிப்பு எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
    • நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்ற திணிப்பு எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. யார் எந்த மொழியையும் பயில்வதற்கு தி.மு.க. தடையாக இருந்ததில்லை. அரசு மிருகப்பலத்தை கொண்டு திணிப்பதைத்தான் தி.மு.க. எதிர்க்கிறது.

    நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை-சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறது.

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணையேற்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன போராட்டங்களை நடத்த அறிவிப்பு செய்துள்ளார்கள்.

    அதன்படி மாநில தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் 9 மணியளவில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் நமது மாநில தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைப் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க. தொண்டர்கள் என அனைவரும் திரளாக தி.மு.க. கொடியுடன் அணிவகுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×