என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய பாலம் கட்டும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    X

    கோப்பு படம்.

    புதிய பாலம் கட்டும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

    • ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 422 மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • இதில் நாகராஜ், கணேஷ், அருள், பிரபு, ரஞ்சித்குமார், பழங்குடியின கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட, செந்தமிழ் நகரில் நீண்ட நாட்களாக உள்ள பழுதடைந்த சிறிய நீர்பாசன வாய்க்கால் பாலத்தை பொதுப்பணித்துறையின் நீர்பாசன கோட்டத்தின் மூலம் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 422 மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பாலம் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி அவைத்தலைவர் ஜலால் ஹனீப், தொகுதி துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், ராஜி, ரமணன், காளிதாஸ்,

    முருகன், திலகர், சபரி, ஏழுமலை, சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, சர்மா, ரகுராமன், சிவாஜி ராவ், பாலா, பிரகாஷ், குமார், நாகராஜ், கணேஷ், அருள், பிரபு, ரஞ்சித்குமார், பழங்குடியின கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×